ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், 4.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு (டிஇடி) முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், 4.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் பணியில் சேர தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 14 ஆயிரம்
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்தத் தேர்வை, ஏறத்தாழ 6.5 லட்சம் ஆசிரியர்கள் எழுதினார்கள்.இந்த நிலையில், இந்த தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வெளியிடப்பட்டது.முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமானwww.trb.tn.nic.inஇதில் பார்க்கலாம். இந்தத் தேர்வில் 4.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி