குரூப்–4 தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியிடப்படும் டி.என்.பி.எஸ்.சி.தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேட்டி . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2013

குரூப்–4 தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியிடப்படும் டி.என்.பி.எஸ்.சி.தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேட்டி .


நடந்து முடிந்த குரூப்–4 தேர்வு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆகஸ்டு மாதம் 25–ந்தேதி குரூப்–4 தேர்வை 5 ஆயிரத்து 556 பணியிடங்களை
நிரப்ப நடத்தியது.

இந்த தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள். அவர்களில் என்ஜினீயரிங் படித்தவர்கள் ஏராளமானவர்கள் இருந்தனர். பணியிடங்களில் 3 ஆயிரத்து 531 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், 1738 தட்டச்சர் பணியிடங்கள், 242 சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்கள் ஆகும்.30 வரைவாளர் பணியிடங்களும், 6 நில அளவர் பணியிடங்களும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 566 பணியிடங்கள் ஆகும். இந்தப்பணியிடங்களுக்கு 12 லட்சம் பேர் தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரு காலிப்பணியிடத்திற்கு 220 பேர் போட்டி போட்டு இருக்கிறார்கள். தேர்வு நடந்து 3 மாதங்கள் ஆகப்போகிறது. அடுத்த மாதம் முடிவு வெளியிடப்படும் இந்த தேர்வு முடிவை எப்போது வெளியிடப்போகிறீர்கள் என்று தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குரூப்–4 தேர்வை எழுதி உள்ளனர். தேர்வு முடிவை மிகச்சரியாக வெளியிடவேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குறிக்கோளாக வைத்திருக்கிறது.

தேர்வு முடிவைவெளியிடுவதற்காக அனைத்துப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. அடுத்தமாதம் (டிசம்பர்) குரூப்–4 தேர்வு முடிவு வெளியிடப்படும். தேதி விவரம் பின்னர் அறிவிக்கப்படும். நடந்து முடிந்த குரூப்–1 மெயின்தேர்வு முடிவு தேர்வு நடந்ததில் இருந்து 3 மாதத்திற்குள் தேர்வு முடிவு வெளியிடப்படும்.பின்னர் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும். குருப்–2 தேர்வு குரூப்–2 தேர்வு டிசம்பர் 1–ந்தேதி நடக்கிறது.புதிதாக குரூப்–1 தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

2 comments:

  1. Group3 result ennachu?

    ReplyDelete
  2. 2011 csse-1 exam 200peru posting kidaikkavillai antha case court pendincle irukku .enponravarkalukku playing vaaippu irukka?please sollunga Nanbarkale.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி