கூடுதலாக 56 மாதிரி கல்லூரிகளுக்கு அனுமதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2013

கூடுதலாக 56 மாதிரி கல்லூரிகளுக்கு அனுமதி.


ராஷ்ட்ரிய உக்கதார் சிக்ஷா அபியான்(RUSA) திட்டத்திற்கான முதல் திட்ட அனுமதி வாரிய கூட்டத்தில், நாட்டில் புதிய 56 மாதிரி கல்லூரிகளை அமைக்க
ஒப்புதல் வழங்கப்பட்டது. ரூ.672 கோடி செலவில் நாடெங்கும் பல்வேறு மாவட்டங்களில் இக்கல்லூரிகள் அமைக்கப்படும்.அனுமதியளிக்கப்பட்ட மொத்த மாதிரி கல்லூரிகளில், 29 கல்லூரிகள் உத்திரப் பிரதேசத்திலும், கர்நாடகா மற்றும் ஒடிசாவில் தலா 8 கல்லூரிகளும், ஆந்திராவில் 7 கல்லூரிகளும், கேரளாவில் 4 கல்லூரிகளும் அமையவுள்ளன.மேலும், ஏற்கனவே அசாம், கர்நாடகா, மராட்டியம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வரும் 31 மாதிரி கல்லூரிகளுக்கான இரண்டாம் தவணை நிதிவழங்குதலுக்கும் இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி