தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு கூடுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2013

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு கூடுகிறது.


சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு கூடுகிறது. சட்டப்பேரவையின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. திடீரென அவசரமாக
சட்டப்பேரவை கூடுவதற்கான காரணம் ஏதும் சட்டப்பேரவை செயலாளர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படவில்லை. தமிழக அளவிலும்,தேசிய அளவிலுமான முக்கியமான பிரச்சனை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்று சமீபத்தில் நடந்த முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்திய சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்கிறார். தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பு காரணமாக பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.இத்தகைய நிலையில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் கலந்து கொள்வது பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி