மாதிரி பள்ளி கல்வி திட்டத்தை கைவிட வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2013

மாதிரி பள்ளி கல்வி திட்டத்தை கைவிட வலியுறுத்தல்.


வியாபார நோக்கத்தில் நிறுவப்படும் மாதிரி பள்ளிக் கல்வித்திட்டத்தை, மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக
ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர் அண்ணாமலை கூறினார்.ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், அனைவருக்கும்தரமான கல்வி என்பது வரவேற்கத்தக்கது. 40 சதவீதம் அரசு, 60 சதவீதம் தனியார்என்ற ஒதுக்கீட்டில் கல்வியை வியாபாரமாக்கும் "ராஷ்டிரிய ஆதர்ஸ்" எனும், மாதிரிபள்ளி கல்வித் திட்டம் ஏற்புடையதல்ல.இப்பள்ளிகளுக்கு, மாநில அரசு இடம் தந்து விட்டு, ஒதுங்கி கொள்ள வேண்டும். நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கான சம்பளத்தில் 90 சதவீதம், தனியார் நிர்ணயிக்கும் நிலையால், இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். தற்போது நடைமுறையிலுள்ள ஆங்கில வழிக்கல்வி முறையை தமிழக அரசு விலக்கிக் கொள்ள வேண்டும்.மூன்று முறை நடந்த 2 லட்சம் பேர் பங்கேற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், 46 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து உள்ளனர். கொள்குறி வகை தேர்வு முறையிலான இத்தேர்வை, ரத்து செய்ய வேண்டும். கடந்த 2004ல் அமல்படுத்திய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் 54 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்தரூ.35 ஆயிரம் கோடி யாருக்கும் பயனின்றி உள்ளது.இதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து டிச.20ல் டில்லியில் பார்லிமென்ட் முன் தர்ணா நடத்த உள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி