கருப்புப்பணத்தை ஒழிப்பது பற்றி அதிகம்பேசுவது நடுத்தர மக்கள்தான்.லஞ்சம், கணக்கில் வராத வருவாய் இவையே கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்கள். இந்தப்பிரச்சினையை முற்றிலும் தடுக்க
இயலாது எனினும் படிப்படியாககுறைக்க முடியும்.இரண்டு வழிகளில் கருப்புப் பணபயன்பாட்டைக் குறைக்கலாம்.ஒன்று, குறிப்பிட்டத்தொகைக்கு மேல் கொண்டஎல்லா பரிவர்த்தனைகளையும் Electronic payment மூலம் செய்யவைக்கலாம்.அதாவது, கிரெடிட் அல்லது டெபிட்கார்டுகளைப் பயன்படுத்துதல்.அதனுடன் பான் கார்டு எண்குறிப்பிடுவதைக்கட்டாயமாக்குதல். அப்படிச்செய்தால்நமது அனைத்து பரிவர்த்தனைகளும்பான் கார்டு எண் மூலம் வருமானவரித் துறையால்கண்காணிக்கப்படும்.அவ்வாறு கண்காணிக்கப்படும்போது, ஓர் ஆண்டில் நாம் செய்யும்செலவுகள், நாம் செலுத்தும்வருமான வரியைவிட அதிகமாகஇருக்கிறது என்றால், கூடுதல்வரி செலுத்த வேண்டி வரும்.இதற்கான விசாரணைகளில்கணக்கில் வராத வருவாய்களைக்கண்டறிவதன் மூலம் கருப்புப்பணம் களையப்படும்.
சரி, யாரெல்லாம் பான்கார்டு வாங்க வேண்டும்?
ஆண்டுக்கு சராசரியாகஇரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல்வருமானம் கொண்டவர்கள் வருமானவரி செலுத்த வேண்டும்.அவர்களுக்கு பான் கார்டு அவசியம்.மேலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல்வங்கிகளில்செலுத்தவோ எடுக்கவோ பான்கார்டு எண் கொடுக்க வேண்டும்.பான் கார்டு இல்லாதவர்கள்,தனக்கு வருமான வரி கட்டும்அளவுக்கு வருமானம்இல்லை அல்லது வரியை நானேகட்டிவிடுவேன்என்று உறுதி அளிக்க வேண்டும்.இதற்கு சில படிவங்கள் வங்கிகளில்இருக்கும். அதைப்பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும்.அது மட்டுமில்லாமல் வாகனம்,நிலம், வீடு போன்ற மதிப்புள்ளபொருட்களை வாங்கும்போதும் பான்கார்டு எண் அவசியம். தவிர,அரசு வேறு எதற்கெல்லாம் பான்கார்டு எண்ணைக் குறிப்பிடவலியுறுத்துகிறதோ அற்கெல்லாம்கொடுக்க வேண்டும்.அதே நேரத்தில் ஒருவர் பான்கார்டு வாங்கியதாலேயே அவர்வருமான வரி கட்ட வேண்டும் என்றஅவசியம் இல்லை. வருமானம்குறிப்பிட்ட அளவைத்தாண்டும்போதுதான் வரி கட்டவேண்டும். பான்கார்டு வைத்திருப்பதில்ஒரு நன்மை உண்டு.அதை அனைத்து அரசு மற்றும்அரசு சாராத நிறுவனங்களில்உங்கள் அடையாள அட்டையாகப்பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி