நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2013

நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.


கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி தேர்வான நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க
கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்கும் தேசிய அளவிலான "நெட்' தகுதி தேர்வை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஆண்டுக்கு 2 முறை (ஜூன் மற்றும் டிசம்பர்) நடத்துகிறது. டிசம்பர் 29-ஆம் தேதி இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க அக்., 30 கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏராளமான விண்ணப்பங்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளதால், மாணவர்களின் நலன் கருதி நவம்பர் 4ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.பூர்த்தி செய்த விண்ணப்பம், தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு, வருகை ரசீது ஆகியவற்றை நவம்பர் 5 முதல் ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க நவம்பர் 9 கடைசித் தேதியாகும்.மேலும் விவரங்களை www.ugcnetonline.in என்ற இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி