தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை எழுத்து தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2013

தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை எழுத்து தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.


இந்தப் படைக்கான எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும் 94 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுமார் 1.37 லட்சம் பேர்
தேர்வு எழுதினர். சென்னையில் 7 மையங்களில் சுமார் 3,000 பேர் எழுதினர். இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் தமிழ்நாடு சீரூடை பணியாளர் தேர்வு குழுமம் ஒருங்கிணைத்து நடத்தியது. இந்தத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் (ஆன்சர் கீ) w‌w‌w‌w.‌t‌n‌u‌s‌rb.‌t‌n.‌g‌o‌v.‌i‌n.​ என்றஇணையத்தளத்திலும், ‌w‌w‌w.‌t‌n‌p‌o‌l‌i​c‌e.‌g‌o‌v.‌i‌n​ என்ற இணையத்தளத்திலும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் இந்த இணையத்தளத்துக்குச் சென்று விடைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஏதேனும் ஒப்புக் கொள்ள முடியாத விடைகள் இருந்தால் தகுந்த ஆதாரங்களுடன் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ அவற்றை இம் மாதம் 18ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது. 18-ம் தேதிக்குப் பின்னர் விடைத் தொடர்பாக வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது என அந்த குழுமம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி