இளநிலை உதவியாளர் பணி: வேலைவாய்ப்பு மூப்பை சரிபார்க்க அழைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2013

இளநிலை உதவியாளர் பணி: வேலைவாய்ப்பு மூப்பை சரிபார்க்க அழைப்பு.


்தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு இன்று வேலைவாய்ப்பு மூப்பை சரிபார்த்துக் கொள்ளலாம்" என, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் துரைராஜ் தெரிவித்தார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
"தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில்இளநிலை உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. இதற்கு பி.எஸ்.சி., கம்ப்யூட்டர்சயின்ஸ் அல்லது பி.சி.ஏ., அல்லது ஏதேனும் ஒரு பட்டத்துடன் கம்ப்யூட்டர் ஆஃபீஸ் ஆட்டோமேசன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு மூப்புடைய பதிவுதாரர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாளஅட்டை, சாதிச்சான்று, ரேஷன் கார்டுடன் இன்று காலை, 11 மணிக்குள் மாவ ட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தங்களது பதிவுகளை சரிபார்த்துக்கொள்ளலாம்.இதில், வயது வரம்பானது எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ., ஆகியோருக்கு 35 வயதும், பி.சி,, பி.சி.எம்., எம்.பி.சி., ஆகியோருக்கு 32 வயதும், மற்ற பிரிவினருக்கு 30 வயதும் ஆகும்.

1 comment:

  1. Junior assistant post is filled by tnpsc group4 exam,then why now employment seniority,it leads to fodgery,anybody know about this reply.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி