அவ்வையார் எத்தனை பேர்? : ஆசிரியர் குழுவை விசாரிக்க முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2013

அவ்வையார் எத்தனை பேர்? : ஆசிரியர் குழுவை விசாரிக்க முடிவு.


அவ்வையார் எத்தனை பேர்? என்ற கேள்விக்கு, விடை தேடும் பணியில், பள்ளி கல்வித்துறை இறங்கியுள்ளது.ஆறாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தை எழுதிய
ஆசிரியர் குழுவை, விரைவில் அழைத்து விவாதிக்க, கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. பள்ளி கல்வித் துறை வெளியிட்ட, ஆறாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில், அவ்வையார் இருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டு காலமாக, அவ்வையார் ஒருவரே என பொருள்படும் வகையில், புத்தகங்களில் தகவலை தெரிவித்த கல்வித்துறை திடீரென இப்போது இருவர் எனதெரிவித்திருப்பது ஏன் என்றும், இது பெற்றோர், மாணவர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது குறித்தும் தினமலர் நாளிதழில் விரிவாக செய்தி வெளியானது.இதையடுத்து, கல்வித் துறை, அவ்வையார் எத்தனை பேர்? என்ற கேள்விக்கு விடை தேடும் வேலையில், இறங்கி உள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:

எந்த ஒரு கருத்தாக இருந்தாலும் தீர்க்கமான, இறுதியான கருத்துக்கள் என முடிவு செய்யப்பட்டவை மட்டுமே பாட புத்தகங்களில் இடம்பெற வேண்டும். சந்தேகத்திற்கு இடமான கருத்துக்கள் பாட புத்தகங்களில் இடம்பெறக் கூடாது. இது மாணவர் மத்தியில், தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்.அவ்வையார் இருவர் தான் என எப்படி, பாட புத்தகத்தில் இடம்பெற்றது என தெரியவில்லை. ஆறாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தை எழுதிய ஆசிரியர் குழுவை விரைவில் அழைத்து அவ்வையார் விவகாரம் குறித்து விளக்கம் கேட்க திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து, விரிவாக ஆய்வு செய்து, உரிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.முதற்கட்ட நடவடிக்கையாக, அடுத்த ஆண்டு, ஆறாம் வகுப்பு இரண்டாம் பருவ பாட புத்தகத்தில் அவ்வையார் குறித்த தகவல்கள் நீக்கப்படலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி