செஸ் விளையாட்டுக்கு ஒதுக்கிய ரூ.22 லட்சம் என்னாச்சு? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2013

செஸ் விளையாட்டுக்கு ஒதுக்கிய ரூ.22 லட்சம் என்னாச்சு?


பள்ளிகளில், செஸ் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு ரூ.22 லட்சத்தை ஒதுக்கியதாக அறிவிப்பு வெளியிட்டும் இன்னமும் தொகை தரப்படவில்லை.ஏழு மாதங்களுக்கு முன்
இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அனைத்து மாவட்டங்களில்உள்ள உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட்டு பள்ளியளவில் போட்டிகள் நடத்தப்பட்டன.அடுத்த கட்டமாக, ஒன்றிய, மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆனால் இதுவரை மாணவர்களுக்கு எந்த பரிசுத்தொகையும் தரவில்லை. சமீபத்தில் சென்னையில் மாநில போட்டிகளும் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. மற்ற போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பயணப்படி, பரிசுத் தொகை தரப்படும்.இந்த விளையாட்டுக்கென மாநில அளவில் ரூ.22 லட்சம் ஒதுக்கப்பட்டதாக ஏழு மாதங்களுக்கு முன்பே கூறப்பட்டது. இத்தொகை, மாவட்ட அளவில் இன்னும் பகிர்ந்தளிக்கப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மகளிர் பிரிவில் 12, ஆடவர் பிரிவில் 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.மாணவர்களை வெற்றி பெறச் செய்யும் நோக்கத்துடன், அரசுப் பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள், தங்களது சொந்த செலவில் மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். போட்டியில் கேன்வாஸ் ஷூ அணிய வேண்டுமென்பதால் அதற்கும் மாணவர்கள்செலவு செய்து உள்ளனர்.விளையாட்டில் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமெனில், அதற்குரிய வசதியை தமிழக அரசே செய்து தர வேண்டும். அப்போது தான் விளையாட்டின் நோக்கம் நிறைவேறும். அரசு அறிவித்த ரூ.22 லட்சத்தை உடனடியாக வழங்கினால் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய முடியும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி