சத்துணவு மையங்களில் புதிய பணியாளர்கள் நியமனம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2013

சத்துணவு மையங்களில் புதிய பணியாளர்கள் நியமனம்.


சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் இன்னும் 20 நாட்களில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான நேர்முக தேர்வு நடத்தி
முடிக்கப்பட்டு, பணி நியமன உத்தரவு தயார் நிலையில் உள்ளது.ஏழை, எளிய குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஆரம்பப் பள்ளி, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், மாவட்ட அளவில், 1,289 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இம்மையங்களில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் என, 3,867 பணியிடங்கள் உள்ளன.ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 14 யூனியனில் தாளவாடி, மொடக்குறிச்சி, சென்னிமலை மற்றும் கொடுமுடி ஆகிய யூனியனில் மட்டும் சத்துணவு மையங்களில் காலியிடங்கள் இல்லை. ஆறு யூனியன்களில் ஓய்வு, மாறுதல் மற்றும் திடீர் மரணம் போன்றவற்றால் ஏற்பட்ட, 196 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. இதனால், குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் சத்துணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதை தவிர்க்கும் பொருட்டு, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாகஉள்ள மையங்களை, அருகில் உள்ள மைத்துடன் இணைத்தனர்.

ஆள் பற்றாக்குறை சமன் செய்வதுடன், குறிப்பிட்ட நேரத்துக்கு குழந்தைகளுக்கு சத்துணவு வழங்க முடியும் என்பதால், இதற்கான கணக்கெடுப்பு நடத்த மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு யோசனை வழங்கியது.மேலும் காலியாக உள்ள பணியிடத்தை, கடந்த ஓராண்டுக்கு முன் நிரப்ப அரசு மேற்கொண்டநடவடிக்கையில், பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், காலிப்பணியிடத்தை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, பணியிடம் நிரப்ப நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டது.தற்போது, 196 காலிப்பணியிடத்துக்கும் நேர்முக தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து கலெக்டர் நேர்முக உதவியாளர் கலாவதி கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள, 196 பணியிடங்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு, பணி நியமனம் வழங்கப்பட உள்ளது. இன்னும், 20 நாட்களில் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் மூலம் காலிப்பணியிடம் நிரப்பபடும், என்றார்.சத்துணவு யைத்தில், 25 குழந்தைகளுக்கு குறைவாக இருந்தால், அருகில் உள்ள சத்துணவு மையத்துடன் இணைக்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. சத்துணவு மையங்களில்உள்ள காலிப்பணியிடத்தை நிரப்பிய பின், சத்துணவு மையங்கள் இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி