ென்னை:தேசிய திறனாய்வு தேர்வின் (என்.டி.எஸ்.,) முதல் நிலை தேர்வை தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மாணவ மாணவியர் எழுதினர்.ஒன்பதாம் வகுப்பில் 60 சதவீதம் பெற்ற 10ம் வகுப்பு மாணவர்களுக்கு
தேசிய திறனாய்வு தேர்வை தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் நடத்துகிறது.
இதில் தேர்ச்சி பெறுவோருக்கு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில் மாதம் ரூ.500ம், இளங்கலை பட்டப்படிப்பின் போது மாதம் 1,000 ரூபாயும், முதுகலை பட்டப்படிப்பின் போது மாதம் 2,000 ரூபாயும், எம்.பில்., பிஎச்.டி., படிக்கும் போது மாதம் 3,000 ரூபாயும், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இதற்கான முதல் நிலை தேர்வை, மாநில அரசும் (பள்ளி கல்வித் துறை), இரண்டாம் நிலை தேர்வை தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகமும் நடத்துகிறது. இந்த தேர்வுகளில்பாடங்களுடன், மனத்திறன் தொடர்பான கேள்விகளும் கேட்கப்படுகின்றன.
தமிழகத்தில் முதல் நிலை தேர்வு நேற்று நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 251 மையங்களில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வரை தேர்வு எழுதினர். சென்னையை பொறுத்தவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தேர்வில், அரசு பள்ளி மாணவர்களை காட்டிலும் தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அதிகளவில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.இதில் தேர்ச்சி பெறுவோர் வரும் 2014ம் ஆண்டு மே மாதம் நடத்தப்படும் இரண்டாம் நிலை தேர்வை எழுதுவர். இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெறுவோர் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற தகுதி பெறுகின்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி