தினமலர் நாளிதழ் செய்தியைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு இணையதளத்தில் இருந்த தவறுகள், சரி செய்யப்பட்டுள்ளன.தமிழக அரசின்
அதிகாரபூர்வ இணையதளத்தில் முதல்வர் அலுவலகம், அனைத்து துறை அமைச்சர்கள், எம்.பி.,க்கள் - எம்.எல்.ஏ.,க்கள், துறை செயலர்கள் குறித்த விபரங்கள் இடம் பெற்றுள்ளன. துறை சார்பில் வெளியிடப்படும் அரசாணைகள், டெண்டர் குறித்த விபரங்கள், அரசு செய்தி குறிப்புகளும், இடம் பெற்றுள்ளன.எம்.எல்.ஏ.,க்கள் பட்டியலில், கும்மிடிப்பூண்டி தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., சேகர், மதுரவாயல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., பீம்ராவ் ஆகியோரின் கட்சி பெயர்கள் மாற்றி குறிப்பிடப்பட்டிருந்தன. இது குறித்து, தினமலர் நாளிதழில், நவ., 5ம் தேதி செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, இணையதளத்தில் இருந்த தவறு திருத்தப்பட்டுள்ளது. அவர்கள் சார்ந்துள்ள கட்சி பெயர் தற்போது சரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Thanks to Dinamalar
ReplyDelete