பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு அளிப்பதில் இழுபறி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2013

பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு அளிப்பதில் இழுபறி.


மே மாதத்தில் நடத்த வேண்டிய,பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தவும், 450 உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், இதுவரை
கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.பள்ளி துவங்குவதற்கு முன், பல வகையான ஆசிரியர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வுநடத்தி, உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், பள்ளி கல்வித் துறையில், தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.450 அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களும், காத்தாடுகின்றன. தொடக்க கல்வித் துறையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. ஆனால், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வையோ, மாவட்டம் விட்டு, மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வையோ, இதுவரை நடத்தவில்லை. பட்டதாரி ஆசிரியர், பதவி உயர்வுகலந்தாய்வும் நடத்தவில்லை.நடப்பு கல்வி ஆண்டு, இறுதி கட்டத்தை எட்டும் நிலையில், இன்னும், பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தாததும், தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாததும், ஆசிரியர் மட்டுமில்லாமல் மாணவர்களுக்கும், பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச்செயலர், சாமி சத்தியமூர்த்தி தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், "பொதுத்தேர்வை எழுதும், மாணவ, மாணவியர் விவரங்களை, தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்ய வேண்டி உள்ளது; இதர பல்வேறு பணிகள் உள்ளன. தலைமை ஆசிரியர் இல்லாததால், பணிகள் தேங்கி கிடக்கின்றன. இதை மனதில் கொண்டு, தலைமை ஆசிரியர் பணியிடங்களை, விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர், ரைமண்ட் பேட்ரிக் கூறுகையில், இரட்டை பட்டங்களை பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டும், பதவி உயர்வு அளிக்கும் விவகாரம், கோர்ட்டில் உள்ளது. இரட்டை பட்டங்களை பெற்ற ஆசிரியர்களில்,ஆங்கில ஆசிரியர் தான் உள்ளனர். எனவே, ஆங்கில பாட ஆசிரியரை தவிர்த்து, இதர பாட ஆசிரியர்களுக்காவது, பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, அதிகாரிகள் முன்வர வேண்டும், என்றார்.கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகையில், "ஆசிரியர் காலி பணியிடங்களால், மாணவர் பாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான், தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.பதவி உயர்வு கலந்தாய்வு, விரைவில் நடத்தப்படும்" என தெரிவித்தன.

3 comments:

  1. Let us wait, wait, and wait . How long?

    ReplyDelete
  2. Let us wait, wait, and wait . How long?

    ReplyDelete
  3. Let us wait, wait, and wait . How long?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி