பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:
ஆசிரியர் தகுதித் தேர்வு
உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உரிய மதிப்பெண் தளர்வுகளை தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.அரசு தனியார் கூட்டு மாதிரிப் பள்ளி திட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். இந்த திட்டத்தை தமிழத்தில் செயல்படுத்த முடியாது என்று தமிழக அரசு திட்டவட்டமாக மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறையின் 181 உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டுமூக நீதிக்கு எதிரான அரசாணை 252ஐ திரும்ப பெற வேண்டும். இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார்.
தமிழக அரசாணை 181 School Education t (C2) Department, Annexure -15-11-2011 இல் NCTE தகுதி தேர்வு வழி காட்டுதல் நெறிமுறைகள் உள்ளபடியே இணைக்கப்பட்டுள்ளது. அதில் தெளிவாக சலுகை மதிப்பெண் கொடுக்க வேண்டும் என குறிப்பிடாதது தான் காரணம் .[May consider giving concession ]. மேலும் தமிழக உயர் நீதி மன்றத்தில் கொடுக்க பட்ட சலுகை மதிப்பெண் வழக்கு தீர்ப்பு 60% தேர்ச்சி மதிப்பெண் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்பதையே வலியுறுத்தியது தமிழக அரசாணை 252 பதிவு மூப்பு மற்றும் கற்பித்தல் அனுபவம் இரண்டிற்கும் மதிப்பெண் வழங்காதது வருத்தம் அளிக்கிறது. மேலும் NCTE-SRC கட்டுப்பாட்டில் உள்ளவற்றில் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் சலுகை மதிப்பெண் வழங்கபடுகிறது ஆண்டிற்கு ஒருமுறை பெங்களூர் Southern Regional Committee அந்த மாநில தகுதி தேர்வு சம்பந்தமாக கூட்டத்தில் கலந்து கொண்டு அறிக்கை சமர்பிக்க வேண்டும் தமிழக தகுதி தேர்வு சம்பந்தமாக கருத்துக்கள் . NCTE-SRC/NCTE –DELHI பாதிக்க பட்டோரால் அனுப்பபடவில்லை.
ReplyDeleteஇது ஒரு புறம் இருக்க தகுதி தேர்வு கேள்வித்தாள் குளறுபடிகள் தான் தேர்வர்கள் அதிக அளவில் தோல்வியடைய காரணம் . கேள்வித்தாள் வல்லுநர் குழு தயாரிக்கும் கேள்விகள் விடைகள் பல விடைகள் வருவதாக உள்ளது . ஆசிரியர் பல்கலை கழகம் பரிந்துரைக்க பட்ட நூல்களில் இருந்து எடுபதில்லை . மேலும் கீ விட்ட பிறகு கொடுக்கப்படும் ஒருவார காலஅவகாசம் போதுமானதாக இல்லை . தமிழ்நாடு பட நூல் நிறுவனம் வெளியிட்ட நூல்களில் இருந்து கொடுத்தாலும் ஏற்று கொள்ள மறுக்கிறார்கள். 2012 சுமார் ஒன்பது கேள்வி விடைகள் வழக்கு சுமார் ஓராண்டாக நடந்து வருகிறது 2013 விடை குளறுபடி வழக்கு புதியதாக தொடரப்பட்டு உள்ளது . முதல் தகுதி தேர்வு விடை குளறுபடி வழக்கு தொடர்ந்தவர்கள் ஒரு சில மதிப்பெண் பெற்று தேர்ச்சியும் பெற்று இருகிறார்கள் .விடை தவறாக இருந்ததினால்தான் மதிப்பெண் கொடுக்க பட்டுள்ளது .வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டுமே மதிப்பெண் .இந்த விடை குளறுபடிகளை சரிசெய்தாலே சுமார் ½ சதவிகிதம் தேர்ச்சி பெரும் .சுமார் 5-7 மதிப்பெண் கிடைக்கும் .சலுகை மதிப்பெண்ணை விட அதிகம் பேர் தேர்ச்சி பெறுவார் மேலும் இந்த தகுதி தேர்வால் சுமார் 40-45வயதை கடந்தவர்கள் வேலை கிடைக்குமா சந்தேகமே.