தமிழ் பண்டிட் என அழைக்கப்பட்ட தமிழாசிரியர்கள், பட்டதாரி தமிழாசிரியர்கள் என்றே அழைக்கப்படுவர் என, அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில், 1988ல் உதவி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட
தமிழாசிரியர்கள், 2000ல் பட்டதாரி தமிழாசிரியர்கள் என, அழைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் அரசாணை, 263ன் படி தமிழாசிரியர்கள், தமிழ் பண்டிட் என, அழைக்கப்படுவர் என, அரசு உத்தரவிட்டது. ஊதியத்தில் சிக்கல்: தமிழ் பண்டிட் என, அழைக்கப்பட்ட தமிழாசிரியர்களுக்கு தர ஊதியம், 4,400 ரூபாய், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 4,600 ரூபாய் என, அரசு நிர்ணயம் செய்தது.தமிழாசிரியர்களாக பணியாற்றுபவர்கள், தமிழ் பண்டிட் என்பதால் தர ஊதியம், 4,600 ரூபாய் பெற்றவர்கள், தணிக்கையின் அடிப்படையில் கூடுதலாக பெற்ற தொகையை திரும்ப செலுத்த, தலைமையாசிரியர்கள் தமிழாசிரியர்களை வலியுறுத்தினர். தமிழக தமிழாசிரியர்கள் கழகம் கோரிக்கை:
தமிழாசிரியர்கள்அனைவரும், தமிழ் பண்டிட் என்பதை விடுத்து, பட்டதாரி தமிழாசிரியர்கள் என,அழைக்கப்பட வேண்டும். பட்டதாரிஆசிரியர்கள் பெறும் தர ஊதியம் 4,600,தமிழாசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். தமிழாசிரியர்களின் கோரிக்கையினை ஏற்று, தமிழ் பண்டிட் என்ற சொல் நீக்கப்பட்டு தமிழ் ஆசிரியர்கள், பட்டதாரி தமிழாசிரியர்கள் என அழைக்கப்படுவர், என்று பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி