லோக்சபா தேர்தல் தேதியை முடிவு செய்ய, 2014 ஜனவரி முதல் ஜூன் வரை அரசு மற்றும் உள்ளூர் விடுமுறை விபரங்களை அனுப்ப, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தல் 2014க்கான
ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது.
ஓட்டுச்சாவடி செயல்படும் பள்ளிகளின் கட்டட தரம், சாய்தளம், பாதுகாப்பு உள்ளிட்ட விபரங்களை சேகரித்து அனுப்ப, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.கடந்த லோக்சபா. சட்டசபை தேர்தல்களின் போது, ஓட்டுச்சாவடிகளில் நடந்த அசம்பாவிதங்கள் விபரங்களையும் சேகரித்து அனுப்ப வேண்டும்.
லோக்சபா தேர்தல்:
2014 லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர்களான கலெக்டர்கள், 2014 ஜனவரி முதல் ஜூன் வரை அரசு விடுமுறை, மாவட்ட வாரியாக விடப்படும் உள்ளூர் விடுமுறை குறித்த விபரங்களை வழங்கவும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தேர்தலின் முதற்கட்ட பணியாக, தேர்தல் அறிவித்த நாள் முதல், கட்சிகள் "டிவி'களில் விளம்பரங்கள் செய்தால், அவற்றை செலவு கணக்கில் ஏற்ற, "டிவி' விளம்பரங்களை கண்காணிக்கும் குழுவை மாநில, மாவட்ட அளவில் ஏற்படுத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி