முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு : சான்றிதழ் சரிபார்ப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2013

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு : சான்றிதழ் சரிபார்ப்பு.


முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கூடுதலாக அழைக்கப்பட்ட 213 பேருக்கு நவம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்
என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 22ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தமிழ் பாடத் தேர்வு வினாத்தாளில் 40 க்கும் அதிகமான பிழைகள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இதனைத்தொடர்ந்து தமிழைத் தவிர பிற பாடங்களுக்கு மதிப்பெண் பட்டியல் www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.இதனைத் தொடர்ந்து, 2770 பேர் அழைக்கப்பட்டு, கடந்த 22 மற்றும் 23ஆம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. ஒரே இன சுழற்சியில் சமமான மதிப்பெண் பெற்ற மேலும் 213 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதாககடந்த 24ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதன் அடிப்படையில் வரும் 5 மற்றும் 6ம் தேதி நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில், தற்போது அழைப்புக் கடிதம் பெற்றவர்களுடன், ஏற்கெனவே பங்கேற்க தவறியவர்களும் பங்கேற்கலாம் என்று டிஆர்பி தெரிவித்துள்ளது.

30 comments:

  1. Dear friends, when ll final list?. And anybody knows what is evaluation certificate. Pls help me.

    ReplyDelete
  2. trb exama cancel pannittu re exam vaiyunga

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  3. just pass commends ... naadari nu .. nee ellam teacher aahi enna panna porae ..

    ReplyDelete
    Replies
    1. Ketta ennam konda nee teacher aahi enna panna pora

      Delete
  4. We expect that, TRB wil submit the most accurate & best solution without affecting hardworkers of PG Tamil A C D series candidates (for 150 marks giving star to 2 qns-article 23, manavayathu/kaalavayathu) & giving proper solution to B series candidates (grace marks to the B series qns nearly 4 to 8 only which has more errors - not for 40 or 21 or 54 qns) on nov 12 at Madurai high court.

    Apart from the 3 decisions submitted by TRB earlier will not be produced once more on nov 12th, but different mode of better unexpectable suitable evaluation method(but for 150 for all) which wil b accepted by all A C D serires & affected B series wil b submitted - with grace marks.

    This is what all the hardworker candidates those who fill 605 seats in merit of all series will think.

    We request our govt & trb to finalise atleast on nov 12th in madurai hc & release the PG Tamil cv list on the same date.

    Before diwali, all candidates relieved out of stress from re examination & felt happy as the govt got stay on oct 29th. All worries of pg tam candidates for last 2 months wil come to an end & it will b converted to happiness on nov 12th.

    ReplyDelete
    Replies
    1. i have been watching your updated information from last year. since your information seems to be correct and i think you know much about trb process i wish to ask you a doubt. i have attended first cv - English. my mark is near to the lowest cut off. nearly 30 English candidates are called under bc quota for second cv. if the determining factor is weightage mark for the final list, i may not be selected. can you guess what could be the selection process. based on written mark or weightage mark. please reply

      Delete
    2. sir do you have weightage mark or not? if you see prospectus in that clearly mentioned after shortlisting weightage mark will be added. so, for short listing they will see age only.

      Delete
    3. i too the same problem. if u have one mark more than cut off ' u will be sure to posting. bcz the problem is only those who are in same cut off. in cut of (bc English )only one senior candidate is called fr cv (88), remaining 30 abdicates r not called. bcz trb needs only one candidate to fill the 247 posing. so the case is filed against trb's selecting method. why u consider the seniority only and also consider experiences. so the trb going to calculate the seniority and experience of the 31 same cut of mark candidates and will select topper of the 31. if any body selected in 1st list,they need not to fear expect the cut off mark candidate. trb selected in the range of 1:1, so trb needs only one candidate in 88 marks. among the 31 one candidate will be selected

      Delete
  5. Aný chance pg second list

    ReplyDelete
  6. Finala eppo than final list viduvanga. appointment order next year thana

    ReplyDelete
  7. Sri sir enga potinga? Second list varuma?

    ReplyDelete
  8. any body knows about PG commerce and maths final key objection case status in HC.

    ReplyDelete
  9. Is there case for maths pg trb ? any status

    ReplyDelete
  10. I have found 6-7 answers are wrong in Pg commerce final key, what should i do sir, any body please.

    ReplyDelete
    Replies
    1. go to court immediately there is only soln.

      Delete
    2. sir,what are the questions ?

      Delete
    3. vanthuttangayaa...vanthuttaanga... comedy pieces

      Delete
    4. all are correct answers trb must be having evidence ..

      Delete
    5. nee ealam teacher ahi eana paana pora.eavano oruvan case poda poren nu sonna udane comment podurathu.case eana achu nu eathana per kilambi irukinga.unake theriyatha final key or times final panni thaan poduvan nu ithu kuda theriyama nee eapadi teacher aha pora.pls dont comment like this.

      Delete
    6. nee enna loosa, final key wrong irithanalathane last TET examil 89 mark eduthavangaluku case sathagama theerpu aachu, answer correct yendral yen tentative keyinnum final keyinnu TRb publish pannuthu. nee romba arivalithanama pesaratha ninappu.

      Delete
    7. last year final key nu onnu vidave illa check panni parunga sir/

      Delete
    8. tentative key , final key , semi final key etha irunthalum thappu thappu than oru varusham aanalum rendu varusham aanalum wrong key endru court order pottal pottadhuthan (select aanavangalukku ellame correct than)

      Delete
    9. Ans sure ah corrrect nu proff iruntha court poi case podu nanba,un ulaipuku palan undu, go and file case nanba,

      Delete
  11. Any body have court order to get job for 2012 pg any equivalent subject. conduct 8148622030

    ReplyDelete
  12. in zo ology any wrong keys please tell me. I have 5 ans i am going to file a case

    ReplyDelete
    Replies
    1. now only you able to found out? what u did on those 4 days...that monday to friday....onething if u file 100 cases also nothing will happen...this time answer keys were finalised 100% accurately by subject experts...they are having evidences for each and every questions in every subject...dont stuck with your text books..so please file case..waste of money..waste of time...nothing will happen....enjoy

      Delete
    2. Zoology nanba its ur rights, surely its correct means u can file a case, hardwork never fails, urimaikaga poraadu

      Delete
    3. anna malai sir you r 100% corret sir.

      Delete
  13. TRB PG TAMIL NEWS UPDATE.


    முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில்,பி வரிசை வினாத்தாளில் 40 கேள்விகள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார்

    . இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச்செயலர், இயக்குநர், டிஆர்பி செயலர் ஆகியோர் மேல்முறையீடு மனுவைத்தாக்கல் செய்தனர்.ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியருக்கான போட்டித்தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 31 ஆயிரத்து 983 பேர் எழுதியுள்ளனர். ஏ,பி,சி,டி என நான்கு பிரிவாக வழங்கப்பட்ட வினாத் தாளில் பி வரிசையில் 8,002 பேர் எழுதியுள்ளனர். நான்கு பிரிவு வினாத்தாளும் ஒன்றே, கேள்விகளின் வரிசையில் மற்றும் மாற்றம் இருக்கும். இருப்பினும்,பி வரிசை வினாத்தாளில் 54 இடங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளன. அதுவும் ங் என்ற எழுத்து து எனவும், ழ் என்பது துணைக் காலாகவும் அச்சிடப்பட்டுள்ளது. தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண்ணை எடுத்தவர், பி வரிசை வினாத்தாளில் தான் எழுதியிருக்கிறார். அதோடு, அதிக மதிப்பெண் எடுத்த முதல் 10 பேரில் 6 பேர் பி வரிசை வினாத்தாளில் எழுதியவர்கள். ஆனால், இரு தேர்வர்கள்மட்டுமே எழுத்துப் பிழையான 21 கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த நிலையில், தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பிழையான 40 கேள்விகளுக்கும் முழு மதிப்பெண் வழங்குவது அல்லது பிழையான கேள்விகளை நீக்கிவிட்டு 110மதிப்பெண்களுக்கு மட்டும் மதிப்பீடு செய்வது என இரு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும், இதை தனி நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை.
    இந்நிலையில், மறுதேர்வு நடத்துவதால் இந்தப் பணி மேலும் தாமதமாகும். மேலும், 31 ஆயிரத்து 983 பேர் எழுதிய தமிழ்ப் பாடத் தேர்வை ரத்து செய்துவிட்டு, மீண்டும் தேர்வு நடத்துவது தேவையற்ற பெரும்செலவினத்தை ஏற்படுத்தும். அதோடு, முந்தைய தேர்வை நன்றாக எழுதியவர்கள், மறுதேர்வில் அதே அளவுக்கு சிறப்பாகச் செய்ய முடியாமல் போகலாம். மறுதேர்வை சிலதேர்வர்கள் எழுத முடியாமலும் போகலாம். இதனால் அவர்கள் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும். ஆகவே,மறுதேர்வு உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் எனமனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

    இந்த மனுவை விசாரித்த எம்.ஜெயச்சந்திரன், எஸ். வைத்தியநாதன் ஆகியோர்
    அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் இடைக்கால தடை விதித்தது.
    முதுகலைத் தமிழாசிரியர்கள் தேர்வு முடிவு குறித்து அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில்.வருகின்ற நவம்பர் 12 ந் தேதி வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதி அரசர்கள் ஜெயச்சந்திரன் எஸ். வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்குமுன் விசாரணைக்கு வர உள்ளது. அன்று எதிர்மனுதாரர்கள் எதிர்மனு தாக்கல் செய்வதுடன் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே சமயத்தில் முதுகலைத் தமிழாசிரியர் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தோர் மறு தேர்வு என்பது தங்களது பலமாத உழைப்பினால்கிடைத்த பலன் கைக்கு வந்தது வாய்க்கு எட்டாத நிலையினை ஏற்படுத்தியுள்ளது என்பதால் வழக்கினில் தங்களையும் இணைத்துக்கொண்டு தங்கள் தரப்பு வாதத்தையும் முன் வைக்கக்கூடும் என தகவல்கள் கூறுகின்றன.
    இதற்கிடையில் நடைபெற்ற முதுகலைத் தமிழாசிரியர் தேர்வில் முதல் இடத்தை பி பிரிவில் தேர்வு எழுதியவர்தான் பெற்றுள்ளதாகவும் அப் பிரிவில் தேர்வு எழுதியோர் 8,002 பேரின் சராசரி மதிப்பெண்ணுக்கும் மற்ற ஏ,சி,டி பிரிவினரின் சராசரி மதிப்பபெண்ணுக்கும் வித்தியாசம் மிகமிகக் குறைவே என டிஆர்.பி தனது மேல்முறையீட்டு மனுவில் தெரிவித்துள்ளதாகவும் தெரிகின்றது.
    அத்தேர்வில் முதல் மதிப்பெண் 120 ஐ ஒட்டியே உள்ளதாகவும் சுமார் 20 பேர் மட்டுமே 150 மதிப்பெண்களுக்கு 110 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் எனவும் . தேர்வு முடிவு அதனடிப்படையில் வெளியிடப்பட்டால் கட்ஆப் மதிப்பெண் வெகுவாகக் குறையக்கூடும் எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி