கரூர் அருகே பள்ளி ஆசிரியை இட மாற்றத்தை கண்டித்து, மாணவ, மாணவியர்களின் பெற்றோர் பள்ளியை நேற்று முற்றுகையிட்டனர்.கரூர் பஞ்சாயத்து யூனியன்
பஞ்சமாதேவி பஞ்சாயத்து சங்கரம்பாளையத்தில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 20 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். வசந்த குமாரி, பூங்கோதை ஆகிய இரண்டு ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 8ம் தேதி வசந்தகுமாரியை, கரூர் அருகே குளத்துப்பாளையம் பள்ளிக்கு மாற்றம் செய்து, மாவட்ட பள்ளி கல்வி உத்தரவிட்டது.இதை அறிந்த மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள், "ஆசிரியை வசந்த குமாரியை இடமாற்றம் செய்யக்கூடாது' என கூறி, நேற்று காலை 10 மணிக்கு பள்ளியை முற்றுகையிட்டனர். ஆசிரியை இடமாற்றத்தை கண்டித்து, மாணவ, மாணவியர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புவதை புறக்கணித்தனர்.
இதனால், பள்ளியில் வகுப்பறைகள் வெறிச்சோடி இருந்தது.தொடர்ந்து, நேற்று காலை, 11 மணிக்கு ஆசிரியை வசந்த குமாரியை இடமாற்றம் செய்யக்கூடாது என, கூறி, மாவட்ட கலெக்டர் ஜெயந்தியிடம் மனு கொடுக்க, பள்ளி மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் புறப்பட்டுச் சென்றனர்.நேற்று மதியம், 4 மணிக்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், விதிமுறைகளை மீறி ஆசிரியைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறி, ஆசிரியர்கள் கரூர் ஒன்றிய உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது,"விதிமுறைகள்படிதான் ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, உதவி தொடக்ககல்வி அலுவலக அதிகாரிகள் கூறினர். இதனால், உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி