பத்தாம் வகுப்பு தேர்வெழுதியசி.பி.எஸ்.இ., மாணவர்கள், பிற வாரியங்களில் அத்தேர்வெழுதிய மாணவர்களைவிட, சிறப்பான செயல்பாடு மற்றும் சுய மேம்பாடு ஆகியவற்றில் திறமையாக செயல்பட்டுள்ளனர் என்று
CBSE மேற்கொண்ட ஒருசர்வே தெரிவிக்கிறது.இந்த சர்வே 30,000 மாணவர்களிடம் எடுக்கப்பட்டது.
இதைப்பற்றி CBSE வட்டாரங்கள் கூறியதாவது:
ஆசிரியர்கள் அதிக பொறுப்புடன் செயல்படும் வகையிலான பள்ளித் தேர்வுகளை CBSE அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டிலுள்ள 13,000 பள்ளிகளில், வெறும் 68 பள்ளிகள் மட்டுமே, தங்களின் மாணவர்களை சிறப்பான வகையில் மேம்படுத்த வேண்டும் என்ற அக்கறையைக் கொண்டுள்ளன என்று ஆய்வில் தெரியவருகிறது.CBSE கல்வி முறையை, மாணவர்கள் இன்னும் அதிகமாக விரும்பும் வகையில் பல மாற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10ம் வகுப்புவரை, CBSE -ல் படிக்கும் மாணவர்களில் பெரும்பான்மையோர், தங்களின் உயர்நிலைக் கல்வியை அதே வாரியத்தில் தொடர்வதில்லை.அப்படி தொடர விரும்பும் சில மாணவர்களும், பள்ளி அடிப்படையிலான தேர்வுகளை மேற்கொள்வதில்லை. பல மாணவர்கள், பத்தாம் வகுப்பு தேர்வு, பிளஸ் 2 தேர்வுக்கான ஒரு முன்னோட்டமாக இருப்பதாக கருதுகின்றனர். இதனாலேயே, பலரும் பத்தாம் வகுப்பில்வாரிய தேர்வை எழுதுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி