சூரியனை நெருங்கும் "ஐசான்" வால் நட்சத்திரம்: வெறும் கண்ணால் பார்க்கலாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2013

சூரியனை நெருங்கும் "ஐசான்" வால் நட்சத்திரம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்.


சூரியனை நெருங்கும் "ஐசான்"வால் நட்சத்திரத்தை, வெறும் கண்ணால் பார்க்கலாம் என தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, மதுரை
அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் குமாரசாமி, ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டியராஜன், நாராயணசாமி, மாவட்ட செயலாளர் பாண்டியராஜன் தெரிவித்ததாவது: சூரிய மண்டலத்தின் கடைசி எல்லையில், சூரியனுக்கு ஏழரை லட்சம் கோடி கி.மீ.,தொலைவில் இந்த வால்நட்சத்திரம் உள்ளது. இது செவ்வாய் கிரகத்தில் இருந்தால், வெறும் கண்ணால் பார்க்கலாம்.வால் நட்சத்திரத்தில் இருந்து 10 லட்சம் கிலோகிராம் கார்பன் டை ஆக்ஸைடு உலர் ஐஸ், 5 கோடி கிலோகிராம் தூசு, 90 ஆயிரம் கிலோ தண்ணீர் ஆகியவை தினமும் ஆவேசத்துடன் வெளியேறுகிறது. இப்பொருட்களை சேகரிப்பதற்கு நாசா ஆராய்ச்சி மையம் பலூன்களை பறக்க விட்டுள்ளது. சூரியனுக்கு அருகில் வரும் போது அதன் வெப்பத்தால்,இப்பொருட்கள் ஆவியாகி எதிர்த்திசையில் வால் போல் நீள ஆரம்பிக்கும். ஐசானும் அப்படித்தான் வால் நட்சத்திரமாக நீளும்.இதன் வால், இதுவரை இல்லாத அளவில் 3 லட்சம் கி.மீ., நீளம் இருக்கலாம், என கூறப்படுகிறது. சூரியனை மிக நெருக்கமாக, 19 லட்சம் கி.மீ., தூரத்தில், நவ., 28ல் நெருங்குகிறது. வேறு எந்த வால் நட்சத்திரமும், சூரியனுக்கு இவ்வளவு அருகில் சென்றதில்லை. எனவே இதை சூரியனை "மேயப் போகும்" வால் நட்சத்திரம் (சன் கிரேஸிங்) எனப்படுகிறது. முதன்முறையாக செவ்வாய், பூமி இரண்டு கிரகங் களில் இருந்தும், பார்க்க முடிகிறது.நவ., 6 முதல் 23 வரை, இவற்றை பூமியிலிருந்து வெறும் கண்ணால் தெளிவாக பார்க்கலாம். பொதுமக்கள் வால் நட்சத்திரத்தை பார்க்கும் வகையில், மதுரையில் இரவில் தங்கி பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளோம். நவ., 18ல் சிட்டம்பட்டி, 19 ல் வலையங்குளம், 20 ல் இளமனூர், 21 ல் பொதும்பு, 22ல் முத்துப்பட்டி பல்கலை நகர் பகுதிகளில், அதிகாலை 4.30 முதல் 6 மணி வரை வெறும் கண்ணால் பார்க்கலாம்.இதுகுறித்த தகவல்கள், இதுவரை படம் எடுத்த காட்சிகள் அடங்கிய விழிப்புணர்வு வேன், நவ., 18 ல் கன்னியாகுமரியில் துவங்கி, நவ., 22 காலை 9 மணிக்கு திருமங்கலம் வருகிறது. பள்ளி மாணவர்கள், இதை பார்க்கலாம் என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி