தமிழகத்தின் தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கிளார்க்
வயதுவரம்பு 31.10.2013 தேதிப்படி
பட்டதாரிகிளுக்கு 24-க்குள்ளும், முதுகலை பட்டதாரிகளுக்கு 26-க்குள் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் கலை, அறிவியல், வணிகவியல் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருடம் புரபேஷனரி காலமா கருதப்படும். அப்போது மாதம் ரூ.16,006 வழங்கப்படும். அதன்பிறகு ரூ.7,200 - 20,100 என்ற விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.150.
இதனை Tamilnadu Mercasntile Bank Ltd என்ற பெயருக்கு Toothukudi/Tuticorin அல்லது Tirunelveli-ல் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாக எடுக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் முறையில் நடைபெறும் தேர்வில் தேர்ச்சி மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:www.tmb.inஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதன் இரண்டு பிரிண்ட்அவுட் எடுத்து அதில் ஒன்றில் கலர் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கையெழுத்திட வேண்டும். மற்றொன்றை கைவசம் வைத்துக்கொள்ளவும்.பிரிண்ட் அவுட்டுடன் டி.டி, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், +2 மதிப்பெண் சான்றிதழ் நகலில் சுயமாக அட்டெஸ்ட் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The General Manager,Human Resourcse Development,Tamilnadu Mercantile Bank Ltd.,Head Office, 52, V.E.Road,Thoothukudi - 628002.
மேலும் முழுமையான விவரங்கள் அறியwww.tmb.inஎன்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.12.2013
ஆன்லைன் விண்ணப்ப படிவத்தின் பிரிண்ட் அவுட் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அனுப்புவதற்கான கடைசி தேதி: 09.12.2013.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி