குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க டில்லி ஐகோர்ட் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2013

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்: சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க டில்லி ஐகோர்ட் உத்தரவு.


புதுடில்லி : குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க சிறப்பு வழக்கறிஞர்களை மாநில அரசு நியமிக்க வேண்டும் என டில்லி ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது. அடுத்த 3
மாதங்களுக்குள் ஒவ்வொரு மாவட்ட கோர்ட்டிலும் சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குழற்றங்களை விசாரிக்க சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் என டில்லி அரசிற்கு ஐகோர்ட் உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் கவுரவ் குமார் பன்சல் என்பவர் டில்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் என்.வி.ரமணா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பெஞ்ச், சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவிட்டதுடன், அது குறித்து மார்ச் 19ம் தேதிக்கும் டில்லி அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. மேலும்சிறப்பு வழக்கறிஞர்களை நிமியக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் 3 வாரங்களுக்கு விளக்கம் தரவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக டில்லி போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வரும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அரசு சிறப்பு நீதிமன்றங்களையும், சிறப்பு வழக்கறிஞர்களையோ நியமிக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருப்பதாக பன்சல் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் பாலியல் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில்கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 18 வயதிற்கு உட்பட்ட 150 மில்லியன் பெண் குழந்தைகளும், 73 மில்லியன் ஆண் குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக கோர்ட்டில் பன்சல் தெரிவித்துள்ளார்.

~> தினமலர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி