ஆசிரியர் தகுதி தேர்வில் வென்றவர்களுக்கு தகுதி சான்றிதழ் தயார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2013

ஆசிரியர் தகுதி தேர்வில் வென்றவர்களுக்கு தகுதி சான்றிதழ் தயார்.


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான, தகுதி சான்றிதழ்களை, ஆசிரியர் தேர்வு வாரியம், அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி உள்ளது. இவை, விரைவில்
வழங்கப்பட உள்ளன.ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான, தகுதி தேர்வு, 2012 ஜூலையில் நடந்தது. இத்தேர்வில், 6.60 லட்சம் பேர் பங்கேற்றனர். வெறும், 2,448 பேர் மட்டுமே, மாநிலம் முழுவதும் தேர்வு பெற்றனர். இதையடுத்து, அக்டோபர், 14ம் தேதி, மறுதேர்வு நடத்தி, தேர்வு பெற்றவர்களின் விவரங்கள், நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான, ஆசிரியர் தகுதி சான்றிதழ், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும், பள்ளி மாணவர்களுக்குவினியோகிக்கப்படும், மதிப்பெண் சான்றிதழை போன்று, ஆசிரியர் தகுதி சான்றிதழும் வடிமைக்கப்பட்டுள்ளது. புகைப்படம், தனித்துவமான ரகசிய குறியீடு, தேர்ச்சி பெற்றநபரின் பெயர், பிறந்த தேதி, தேர்ச்சி பெற்ற தாள் மற்றும் பாடம், மதிப்பெண்கள் ஆகியவை, சான்றிதழில் தெளிவாக அரசாங்க முத்திரையுடன் இடம் பெற்றுள்ளன.

13 comments:

  1. then what about TNTET 2013

    ReplyDelete
  2. When trb give posting for pg slected candidates

    ReplyDelete
    Replies
    1. Why TRB not yet releasing the final list of selected PG candidates? I called TRB multiple times last few days but they are not attending any calls!!

      Delete
  3. eppo tet -2013 kku cv

    ReplyDelete
  4. Few cases are pending so they are not publish

    ReplyDelete
    Replies
    1. few cases against pg list? if you know pls give details sir.

      Delete
  5. Dec 6 varai Lectures CV Nadakkuthu. After only called TET CV

    ReplyDelete
  6. It's ok, when will give 2013oct 5th TET passed candidate certificate ?
    when will TET passed candidate CV ?
    when will appointment ?
    when will PG final list counseling and appointment ?
    it's all PG and TET pass candidate mind questions, its our feelings please respect them. thank you.

    ReplyDelete
  7. Pg final result epo pa poduvinga

    ReplyDelete
  8. டி.இ.டி மீது பல வழக்குகள் உள்ளது.அந்த வழக்குகள் நிறைவடைய ஒரு வருட காலமாவது ஆகும்.

    ReplyDelete
  9. TET BT. Asst appointments may be scheduled next june, due to forth coming parliamentary elections, dual degree case judgement is pending for promotions, after the judgement of dual degree case transfer of B.T assistants in DEE is possible and after the transfer, promotions from SGT to BTs after this process only new appointment of TET selected candidates is possible, but the judgement of the case will come in the end of Dec or Jan, after that election regulations may came into being, so be patient

    ReplyDelete
  10. case ellam mudichutu april matham exam vaika vendithuthane nanga private school job resign panni irukka matom ean ippadi namodu vilaiyaduranga result koduka 3 madham cv nadatha 2 madham posting poda I year august nadandha exam ku next june than posting podanuma election mudunju I year padhavi ethuka sonna summa irupangala teachers endral ivlo kevalama friends yar ketpathu namakaga kadavulthan varanum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி