அதிகாரிகள் அலட்சியம் மாறுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2013

அதிகாரிகள் அலட்சியம் மாறுமா?


சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசின் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு எதிராக 321 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. 2011 முதல் 2012ம் ஆண்டு
வரை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாததால், இவை தாக்கல் செய்யப்பட்டன.அரசு பள்ளிகளில் பணியாற்றும் 140 இடைநிலை ஆசிரியர்கள், 102 சிறப்பு ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் 51 பேர், சிறப்பு ஆசிரியர்கள் 28 பேர் என பலர் இவற்றை தாக்கல் செய்திருக்கின்றனர். இதே போல், மற்ற துறை அதிகாரிகள் மீது போடப்பட்டுள்ளஅவமதிப்பு வழக்குகளை சேர்த்தால், அவை இன்னும் அதிகமாகும்.நீதித்துறையின் முயற்சியால் லோக் அதாலத் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகள் குறைக்கப்பட்டாலும், அரசு உயர் அதிகாரிகளின் அலட்சியத்தால் இது போன்ற வழக்குகள் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றன.

எனவே, நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். அல்லது மேல்முறையீடு செய்ய வேண்டும். அதிகாரிகளின் அலட்சியம் நீதித்துறையின் பணியில் குறுக்கிடுவது போல் இருக்கக் கூடாது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி