ஸ்பெஷல் பீஸ்' என்னாச்சு... தலைமையாசிரியர்கள் தவிப்புக்கு இன்று முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2013

ஸ்பெஷல் பீஸ்' என்னாச்சு... தலைமையாசிரியர்கள் தவிப்புக்கு இன்று முடிவு.


மாணவர்களுக்கான சிறப்புக் கட்டணம் (ஸ்பெஷல் பீஸ்) இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாததால்,மதுரையில் இன்று நடக்கும்
கல்வி அதிகாரிகள் கூட்டத்தில்,தலைமையாசிரியர்கள் இப்பிரச்னையைஎழுப்ப திட்டமிட்டுள்ளனர்.மாணவர்களுக்கு2008ம் ஆண்டு முதல்,ஆண்டுதோறும் டிச.,க்குள் சிறப்புகட்டணத்தை அரசு வழங்கி வருகிறது. இதில்,பள்ளிப் பராமரிப்பு,மருத்துவ முகாம்,சாரணர் இயக்கம்,என்.எஸ்.எஸ்.,திட்டம்,என்.சி.சி.,செயல்பாடு,ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணிகளுக்காக இப்பணத்தை தலைமையாசிரியர் பயன்படுத்துவார்.இரண்டு ஆண்டுகளாக இக்கட்டணத்தை அரசு வழங்கவில்லை. இதனால்,ஆயிரக்கணக்கான பள்ளிகளில்,தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்த பணம் ரூ.25ஆயிரம் வரை செலவிட்டனர்.இந்நிலையில்,நீண்ட மாத இழுபறிக்கு பின்,சிறப்புக் கட்டண நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. ஆனால்,பள்ளிகளுக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை. இதில்,பல தலைமையாசிரியர்கள் ஓய்வு பெற உள்ளதால்,செலவழித்த தொகையை திரும்ப பெற முடியாத நிலையில் தவிக்கின்றனர்.அவர்கள் கூறுகையில், ""இன்று (நவ.,4)மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும்அனைத்து தலைமையாசிரியர்கள் கூட்டம்,முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி தலைமையில் நடக்கிறது. இதில்,சிறப்பு கட்டணம் பிரச்னையை எழுப்ப முடிவு செய்துள்ளோம்,''என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி