கல்வி உதவித்தொகை பெற மாணவிகளுக்கு அழைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2013

கல்வி உதவித்தொகை பெற மாணவிகளுக்கு அழைப்பு.


திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:"திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவியரின் கல்வி மேம்பாடு,
தொடர்ந்து கல்வி பயிலும் வகையில் பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நடப்பு 2013-14ம் கல்வி ஆண்டு முதல் 7ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புபயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு ஒரு வருடத்திற்கு 1,500 ரூபாய் வழங்கப்படும். இத்தொகை மாணவிகளின் பெயரில் உள்ள வங்கி கணக்குஅல்லது மாணவிகளின் தாயாரின் பெயரில் தொடங்கப்பட்ட அஞ்சலக சேமிப்பு கணக்கிலேயே தொகை செலுத்தப்படும்.பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை பெறுவதற்கு உயர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், சம்மந்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் விரைவில் விண்ணப்பித்திட வேண்டும்.பெண் கல்வி உதவித் தொகை பெற தகுதியுள்ள அனைத்து மாணவிகளும் வங்கி கணக்கு கண்டிப்பாக துவங்க வேண்டும்.பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கான பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை கேட்புரிமை பட்டியலை வரும் 30ம் தேதிக்குள் சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் இக்கல்வி உதவித் தொகை பெறுவது குறித்த சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி