வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 14, 2013

வங்கி தேர்வுக்கு இலவச பயிற்சி.


வங்கி தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு கையேடுகளுடன் கூடிய இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. தகுதியுடையோர் பங்கேற்று பயன் பெறலாம்" என,
பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது தெரிவித்துள்ளார்.கலெக்டர் வெளியிட்ட அறிக்கை: "நவம்பர் 30ம் தேதி வங்கித்தேர்வு நடக்கவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு என்று சிறப்பு பயிற்சிவகுப்புகள் இலவசமாக எடுக்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் பங்கு பெறுபவர்களுக்கு இலவச கையேடுகளும் வழங்கப்படவுள்ளது.நாளை, 15ம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. தொடர்ந்து 10 நாட்களுக்கு அனுபவம் வாய்ந்த வங்கி மேலாளர்கள் பங்குபெற்று பயிற்சி வகுப்புகளை நடத்தவுள்ளார்கள். இந்த 10 நாட்களும் எந்தெந்த நேரத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்பது 15ம் தேதி நடக்கும் வகுப்பில் தெரிவிக்கப்படும்.இப்பயிற்சி குறித்த மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள 73730-03579 என்ற மொபைல் நம்பரிலோ, இந்தியன் வங்கி பெரம்பலூர் கிளையின் முதுநிலை மேலாளர் வரதனை 94422-71101 என்ற மொபைல் நம்பரிலோ தொடர்பு கொள்ளலாம்.பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் அதிக அளவில் வங்கித்தேர்வில் தேர்ச்சிபெற்று வங்கிகளில் உயர் பதவிகளை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்பினை தகுதியுடையோர் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி