கண்டு கொள்ளப்படாத சுப்ரீம் கோர்ட் உத்தரவு குடிநீர், கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகள் ஆய்வில் அதிர்ச்சி 'ரிப்போர்ட்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 6, 2013

கண்டு கொள்ளப்படாத சுப்ரீம் கோர்ட் உத்தரவு குடிநீர், கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகள் ஆய்வில் அதிர்ச்சி 'ரிப்போர்ட்'


பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் பெரிதும்அவதிப்பட்டு வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதுகுறித்து மனித உரிமை கல்வி திட்ட இயக்குனர்
மணிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
குடிநீர், கழிவறை, வகுப்பறை, சுற்றுசுவர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பகுதிகளில் 6 மாதத்திற்குள் அவற்றை ஏற்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு பின்னரும் அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.நெல்லை மாவட்டத்தில் 13 பஞ்.,யூனியன்களில் 79 பள்ளிகளில் எங்கள் அமைப்பு சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. 18 அரசு தொடக்கப் பள்ளிகள், 3 அரசு நடுநிலைப் பள்ளிகள், 4 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 9 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 24 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், 14 அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள், 2 அரசு உதவி பெறும் உயர்நிலை, 2 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் இந்த ஆய்வு நடந்தது.இதில் 43 சதவீத பள்ளிகளில் குடிநீர் இல்லை. 63 சதவீத பள்ளிகளில் கழிப்பறைவசதி கிடையாது. 65 சதவீத பள்ளிகளில் தனித் தனி வகுப்பறை வசதிகள் இல்லை. 61 சதவீத பள்ளிகளில் விளையாட்டு மைதானமும், 37 சதவீத பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுவும், 29 சதவீத பள்ளிகளில் போதுமான ஆசிரியர்களும் இல்லை என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது ஆசிரிய, ஆசிரியைகளும் பாதிக்கப்படுகின்றனர்.அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள், தனித்தனி வகுப்பறைகள், இட வசதியுடன் கூடிய விளையாட்டு மைதானம், சுற்றுசுவர், நூலக வசதிகளை செய்ய வேண்டும்.பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு முறையாக செயல்படுத்த வேண்டும். மோசமான நிலையில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.போதுமான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே எதிர்பார்க்கும் கல்வி முன்னேற்றத்தை அடைய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது நிர்வாகிகள் பரதன், பொற்செழியன் உட்பட பலர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி