ஆசிரியர் தகுதித் தேர்வு: இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் வருகிறது மாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 8, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு: இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் வருகிறது மாற்றம்.


ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் "வெயிட்டேஜ்' மதிப்பெண்
அடிப்படையிலும் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தனர். இதில் உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை மட்டுமே மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இதில் இரண்டு தாள்களையும் சேர்த்து மொத்தம் 4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளில் 14,496 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாளில் 12,596 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்களும், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் 2 ஆயிரம் காலிப்பணியிடங்களும் உள்ளன. கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் காலிப்பணியிடங்களை விட குறைவான ஆசிரியர்களே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்ததால் நியமன முறை அதிக முக்கியத்துவம் பெறவில்லை.

என்ன வழக்கு?

இடைநிலை ஆசிரியர்களை மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சிலஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை இடைநிலை ஆசிரியர்களை மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயே கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வு இரண்டிலும் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் சில மாதங்களுக்கு முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதால், இந்த வழக்கை திரும்பப் பெற அனுமதி வழங்க வேண்டும் எனமனுவில் கோரப்பட்டது. மனுவை ஏற்று இந்த வழக்கை முடித்துவைத்து உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற இடைக்கால உத்தரவுகாலாவதியாகியுள்ளது. எனவே, இப்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களை பட்டதாரி ஆசிரியர்களைப் போல வெயிட்டேஜ் மதிப்பெண் முறை (அரசாணை எண் 252) மூலம் நியமனம் செய்யலாமா அல்லது மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யலாமா என தமிழக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

9 comments:

  1. good.weightage only must be considered to select qualified teachers.

    ReplyDelete
    Replies
    1. ena Qualified select panalum SGT Teacher Clerk mari Nadathuranga sir

      Delete
    2. Madam....eligibility irundha podhatha...90above eduthachu....pinna enna..pass aana widows,landgivers to govt 4valichalai...physically disabled...ex and current army dependents ivanhalukku .....after passing 8 percent. Reservation thatavendum........this is only for who scored 60percent above....type ur openion..

      Delete
    3. How will you calculate weightage marks

      Delete
    4. hai gunasundari madam, open the following site and calculate your weightage.

      http://gpress.in/2013/10/tntet-weightage-marks-calculator/

      Delete
  2. Sir/madam , what u r saying I cant understand. You need seniority or weightage. Say clearly

    ReplyDelete
    Replies
    1. After passing...seniority with reservation...this only for dted...

      Delete
  3. My mark is 101 Bc community paper 2 english is there any chance for me? My cut off mark is 69 only

    ReplyDelete
  4. My mark is 101 Bc community paper 2 english is there any chance for me? My cut off mark is 69 only

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி