குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டு இயங்கும் தேடுதளம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2013

குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டு இயங்கும் தேடுதளம்.


இது குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டு இயங்கும் தேடுதளம்.இந்த தளம் Google Custom Search மற்றும் Google Safe Search தளங்களைப்
பயன்படுத்தி, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இணையத் தேடலைத் தருகிறது. குழந்தைகள் காணக்கூடாத தளங்களின் பட்டியலைத் தன்னிடத்தே வைத்துக் கொண்டு, அவற்றை விலக்கி, பார்க்கக் கூடிய தளங்களில் உள்ள தகவல்களை மட்டும் தருகிறது.குழந்தைகள் ஆர்வம் காட்டும் விஷயங்கள் குறித்த தளங்களைப் பட்டியல் இட்டுக் காட்டுகிறது. இதில் உள்ள Parents பிரிவில் நாம் இத்தளத்தின் இயங்கு தன்மை குறித்து அறியலாம்.மேலும் இணையப் பாதுகாப்பு குறித்து பல குறிப்புகளும் தரப்படுகின்றன. இந்த தளத்தினை ஹோம் பேஜாக மாற்றுவதற்கும் வழி தரப்பட்டுள்ளது.இதில் தந்துள்ள குறிப்புகள் மற்றும் வழி காட்டுதல்களைப் பின்பற்றி செட் செய்துவிட்டால், உங்கள் குழந்தைகள் இந்த தளத்தினைப் பயன்படுத்தி, அவர்கள் தேடலை மேற்கொள்ளுமாறு செய்திடலாம்.மற்ற பிற தேடுதலுக்கான தளங்களைப் போலவே இதுவும் செயல்படுகிறது. ஆனால், குழந்தைகளின் பாதுகாப்பான தேடலை மட்டுமே தன் முதல் நோக்கமாக வைத்துள்ளது.எடுத்துக்காட்டாக, ஒரு சிறுவன் dinosaurs குறித்துஅறிய, அந்த சொல்லை, இந்த தளத்தின் தேடல் கட்டத்தில் டைப் செய்து என்டர் தட்டியவுடன், குழந்தைகளை மனதில் கொண்டு டினோசார் குறித்து தகவல்களைத் தரும் தளங்களின் பட்டியல் மட்டுமே காட்டப்படும்.இந்த தளத்தில் சிறுவர்களுக்கான கேம்ஸ், தகவல் பக்கங்கள் மற்றும் வண்ணம் தீட்டி மகிழப் பக்கங்களும் தரப்பட்டுள்ளன. ஒருமுறை இதனைப் பார்த்துவிடுங்கள்.

Website : http://www.kidrex.org/

1 comment:

  1. your website very useful.
    respected sir,
    i am need a g.o for tamil valarchi durai-government deportment
    annoucement all are puplish in tamillanguage allso

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி