கற்பித்தல் பாதி கணக்கெடுப்பு பாதி : அலைக்கழிக்கப்படும் ஆசிரியர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2013

கற்பித்தல் பாதி கணக்கெடுப்பு பாதி : அலைக்கழிக்கப்படும் ஆசிரியர்கள்.


பல்வேறு கணக்கெடுப்பு,வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் என கற்பித்தலுடன்,பல பணிகள் கூடுதலாக செய்ய வேண்டிஉள்ளதால்,ஆசிரியர்கள்
பாதிக்கப்படுகின்றனர்.அன்னூர் ஒன்றியத்தில்75துவக்க, 16நடுநிலைப் பள்ளிகளில், 6,000மாணவ,மாணவியர் படிக்கின்றனர். அனைத்து பள்ளிகளிலும் சத்துணவுமையங்கள் செயல்படுகின்றன."அனைவருக்கும் கல்வி இயக்கம்'சார்பில்,துவக்கப்பள்ளிகளுக்கு பள்ளி கட்டடங்கள் பழுதுபார்ப்பு மானியம் ரூ.5,000,பராமரிப்பு மானியம் ரூ.5,000வழங்கப்பட்டது.நடுநிலைப் பள்ளிகளுக்கு,தலா10ஆயிரம் வீதம்20ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இரு மாதங்களுக்கு முன் தொகை வழங்கியபோது, "எந்த பணிக்கு செலவிட வேண்டும்;என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்'என,தெரிவிக்கப்பட்டது.இரு வாரங்களுக்கு முன்,அனைத்து துவக்க,நடுநிலைப் பள்ளிகளும்,ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தின் பெயருக்கு,ரூ.3,000க்கு வங்கி வரைவோலை (டி.டி.,)எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர்கள் வரைவோலை எடுத்து,அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் சமர்ப்பித்தனர்.இந்நிலையில்,இருநாட்களாக,அனைத்து துவக்க,நடுநிலைப் பள்ளிகளும்,வரைவோலையை வந்து திரும்ப பெற்றுக் கொள்ளும்படியும்,அதை வங்கியில் மீண்டும் ரொக்கமாக்கி சம்மந்தப்பட்ட கணக்கில் வைக்கவும் அறிவுறுத்தினர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் கற்பித்தல் பாதிப்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஆனந்தராமன் கூறியதாவது:

கற்பித்தலில் புதிய மாற்றங்கள்,சமச்சீர் பாடத் திட்டம்,முப்பருவ கல்வி திட்டம் ஆகியவற்றால் கற்பித்தலில் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. ஏற்கனவே ஆசிரியர்கள் பல்வேறு கணக்கெடுப்பு,வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் என கற்பித்தலுடன்,பல பணிகள் கூடுதலாக செய்ய வேண்டி உள்ளது. இந்நிலையில்,பராமரிப்பு பணிக்கு வரைவோலை எடுக்க,கிராமப்புறத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் நகருக்கு வந்து சென்றதில் அரை நாள் பணி பாதிக்கப்பட்டது. மீண்டும் அந்த வரைவோலையை ரத்து செய்து ரொக்கமாக்க,கிராமத்தில் இருந்து நகருக்கு வந்து சென்றால்,அரை நாள் கற்பித்தல் பணி பாதிக்கப்படும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் தவிர,இதர பணிகள் வழங்குவதால்,அலைக்கழிப்பும்,கற்பித்தலில் குறைபாடும் ஏற்படும் வாய்ப்புஉள்ளது. இதை தவிர்க்க,அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு,ஆனந்தராமன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி