தகுதி தேர்வை காரணம் காட்டி பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளை டிஸ்மிஸ் செய்வதற்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.தமிழ்நாடு தொடக்கப் பள்ளி
ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தர்மராஜ் பிராங்களின் வரவேற்றார். மாநில துணை செயலாளர் செய்யது இப்ராகிம் மூசா, மாநில செயற்குழு உறு"பபினர் ஆரோக்கியராஜ், முன்னாள் மாவட்ட பொருளாளர் சிவஞானம் முன்னிலை வகித்தனர்.தொடக்க கல்வித் துறைக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளில் படிக்கும் 2012-13 மாணவ, மாணவிகளின் விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இப்பணிகளால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுவதால் இதற்காக தனி நபர்களை நியமித்து கொண்டு இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தகுதி தேர்வைகாரணம் காட்டி பள்ளிகளில் 11.10.2011க்கு பின்னர் நியமனம் செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளை டிஸ்மிஸ் செய்யும்உத்தரவு நடவடிக்கையை தமிழக முதல்வர் நேரில் தலையிட்டு கைவிட வேண்டும்.6வது ஊதிய குழுவில் முரண்பாடுகளை களைய வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இதுசம்பந்தமாக ஆசிரியர் இயக்கங்களை அழைத்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பார்லிமென்ட் தேர்தலில் பெண் ஆசிரியர்களை அந்தந்த பகுதிகளிலேயே தேர்தல் பணிகளை மேற்கொள்ள செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில் நிர்வாகிகள் ஸ்டீபன், கருணாகரன், மோதிலால் ராஜ், ஜோசப், சார்லஸ், மருது பாண்டியன், உஸ்மான், மோதிலால், ரமேஷ், சேகர், செல்வின், தங்கசாமி, வியாகப்பன்,ஜார்ஜ் இனிகோ, ஜான்துரைசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னாள் மாவட்ட பொருளாளர் சிவஞானம் நன்றி கூறினார்.
16, 600 (SGT, BT, PG) TEACHERS APPOINTMENT NEWS:
ReplyDeleteதகுதி தேர்வில் வெற்றி பெற்ற 16,600 பேருக்கு விரைவில் பணி நியமனம்
நெல்லை: தமிழகத்தில், இதுவரை நடத்தப்பட்ட 3 ஆசிரியர் தகுதி தேர்விலும் குறைந்த அளவிலான ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் முறையாக நடத்தப்பட்ட தகுதி தேர்வில் முதல் தாளில் 12 ஆயிரத்து 596 பேரும், 2ம் தாளில் 14 ஆயிரத்து 496 பேரும் தேர்ச்சி பெற்றனர். இரு தாள்களையும் சேர்த்து மொத்தம் 27 ஆயிரத்து 92 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்வு எழுதிய 6.6 லட்சம் பேரில் 4.09 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.தேர்ச்சி பெற்ற 27 ஆயிரத்து 92 பேரும், தங்களது சான்றிதழ்கள் சரிபார்க்க அழைக்கப்பட்டு சொந்த மாவட்டத்திலேயே ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று ஏக எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில், 11 ஆயிரத்து 922 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், 2 ஆயிரத்து 881 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், ஆயிரத்து 821 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்புவதற்கான நடவடிக்கையை பள்ளிக்கல்வித் துறை எடுத்து வருகிறது. மொத்தம் 16 ஆயிரத்து 624 ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன உத்தரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கல்விச் சான்று மற்றும் பிற தகுதிகள் உள்ளிட்டவைகளை சரிபார்த்து தேர்வு செய்யப்பட்டு ஒரு மாதத்துக்குள் பணி வழங்கப்படும் என தெரிகிறது.
எக்ஸ்ட்ரா தகவல்:
கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்ற சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
handihapped person tet pass agita kandippa velai kidikuma
ReplyDelete