குரூப்-4 தேர்வு மூலம் நியமிக்கப்பட்டு குரூப்-2 தேர்வு எழுதி வெளியேறுபவர்களை தடுக்கும் முயற்சியாக நில அளவைத் துறையில் புதிதாக சேர்ந்தவர்களிடம் ஐந்தாண்டு கட்டாயம் பணியாற்ற ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது.தமிழகத்தில்
நில அளவைத் துறையானது சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மண்டலத்தை கொண்டுள்ளது. மாவட்டந்தோறும் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் இத்துறை செயல்படுகிறது. அரசு, தனியார் நிலம், கட்டடங்களை அளவீடு செய்து, பட்டா, சிட்டா, அ பதிவேடு, புலப்பட நகல், பத்திரம், உயில், பவர் பத்திரம், பத்திரப்பதிவு மற்றும் வருவாய்த் துறையின் ஆவணங்களை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்கின்றனர்.
90 நாள் பயிற்சி
சுதந்திரமடைந்து கடந்த ஐந்தாண்டுக்கு முன் வரையிலும் ஆங்கிலேயர் காலத்திய சங்கிலி, குத்தூசி உள்ளிட்ட கருவிகளை கொண்டு நில அளவீடு செய்துவந்தனர். தொலைத்தொடர்பு துறை வளர்ச்சி யால் ஜி.பி.ஆர்.எஸ்., உதவியால் இணையதளம் மூலம் வரையறுக்கப்பட்ட வரைபடத்தின் அடிப்படையில் நவீன கருவிகளாக நில அளவை பணி செய்கின்றனர்.மக்கள் தொகை, தொழில், நகரங்களின் வளர்ச்சியால், நில அளவை துறையினர் பணியும் அதிகரித்து கொண்டே செல்கிறது. வருவாய்த் துறையில் பதிவு செய்து ஒரு வார காலத்துக்குப்பின் நில அளவை பணிகளை மேற்கொள்கின்றனர். நில அளவை துறையின் கோவை மண்டலத்தில் திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன.கடந்தாண்டு நடந்த குரூப்4 தேர்வு மூலம் நில அளவை துறை இளநிலை உதவியாளர், உதவியாளர், சர்வேயர், வரைபடத்தயாரிப்பாளர், உதவி இயக்குனர் ஆகிய காலிப்பணிடங்கள் நிரப்பப்பட்டன.இவர்களில், அளவையாளர் பணியிடத்துக்கு தேர்வாகி 90 நாள் பயிற்சி பெற்றுவந்தவர்களில் 13 பேர் குரூப்-2 தேர்வில் தேர்வானதால் பாதியில் வெளியேறினர். தவிர, வரும் 2016ம் ஆண்டு இத்துறையில் 60 சதவீதம் பேர் ஓய்வுபெறவுள்ளனர். காலியாகவுள்ள பணியிடத்தை நிரப்ப குரூப்-4 தேர்வில் தேர்வாகி காத்திருப்போர் பட்டியில் இருந்தவர்களை கொண்டு மீண்டும் நிரப்பியுள்ளனர். வரும் டிசம்பர் மாதம் குரூப்-2 தேர்வு வரவுள்ள தால் முன்னெச்சரிக்கையாக ஒப்பந்தம் பெற்றுள்ளனர்.
200 பேர் ஓய்வு
இது குறித்து, நில அளவைத் துறை அலுவலர்கள் கூறியதாவது: "தமிழகத்தில் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மண்டல நில அளவை துறையிலும் கடந்த ஜூன் மாதம் தலா 200 பேர் வரை ஓய்வு பெற்றனர். தேர்வுத் துறை மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.ஏற்கனவே, பணியில் சேர்ந்து 213 பேர் வெளியேறியதை அடுத்து புதிதாக சேர்க்கப்பட்டவர்களிடம் ஐந்தாண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என, ஒப்பந்தம் பெறப்பட்டு உள்ளது. இவர்களுக்கு முழுமையான பயிற்சி முடியும் வரையில் நில அளவை பணிகளை ஓய்வுபெற்ற விருப்பம் உள்ளவர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர்." இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி