சி.பி.எஸ்.இ., வாரியத்தின் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு தேதிகள், எப்போதும் போலவே, 2014ம் ஆண்டு மார்ச் 1ம் தேதிதான் என்றும், தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட வாய்ப்புகள்
இல்லை என்றும், CBSE தலைவர் வினீத் ஜோஷி கூறியுள்ளார்.அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, பெற்றோர்களிடமிருந்து வந்த இதுதொடர்பான கணக்கற்ற கேள்விகளையடுத்து, அவர்இந்த வெளிப்படையான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.ஒவ்வொரு ஆண்டும், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான நிறைவுத்தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பு, அதற்கு முந்தைய ஆண்டின் டிசம்பர் 3 அல்லது 4வது வாரத்தில் வெளியாவது வழக்கம். அதுபோலவே, இந்தாண்டும் நடைபெறும்.ஒவ்வொரு மாநில தேர்தல் ஆணையங்களுக்கும், CBSE தேர்வுகளின் தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி