தனது மாணவர்களுக்கு பொருளாதார ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களுக்கு நடப்பு பொருளாதார நிலை குறித்த அறிவை வழங்கும் பொருட்டு, National Institute of Securities Markets (NISM) என்ற அமைப்புடன் இணைந்து,
தேசிய அளவிலான National Financial Literacy Test(NFLT) என்ற தேர்வை நடத்த CBSE முடிவு செய்துள்ளது.பள்ளி மாணவர்களிடையே பொருளாதாரம் குறித்த அடிப்படை அறிவை சோதிப்பதற்கான முதல் தேசியளவிலான தேர்வாக இது அமையும். நாடு முழுவதும் 8ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இத்தேர்வு நடத்தப்படும்.நிதி மற்றும் பொருளாதாரத் துறை சார்ந்த அறிவை பெரும்பொருட்டு, மாணவர்களை ஊக்கப்படுத்துவதே, இத்தேர்வின் முக்கிய நோக்கம். முக்கியமான பொருளாதார முடிவுகளை எடுப்பதற்கான திறன்களைப் பெற்றிருப்பதற்கான தேசியம் தழுவிய முதல் நடவடிக்கையாக இத்தேர்வு பார்க்கப்படுகிறது.இத்தேர்வு 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி நடத்தப்படும். இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடைபெறும் இத்தேர்வில், நிதி மற்றும் வணிகம் தொடர்பான75 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி