வெப்சைட்டில் மாணவர்கள் பதிவு விபரங்கள் பணிகள் அதிகரிப்பால் கல்வித் தரம் பாதிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 15, 2013

வெப்சைட்டில் மாணவர்கள் பதிவு விபரங்கள் பணிகள் அதிகரிப்பால் கல்வித் தரம் பாதிப்பு.


திருநெல்வேலி : வெப்சைட்டில் மாணவர்கள் பதிவு விபரங்களை அடிக்கடி பதிவு செய்வதால் பணிகள் அதிகரித்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து
முதன்மை கல்வி அலுவலரிடம், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சாம் மாணிக்கராஜ் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தொடக்க கல்வித்துறையில் படிக்கும் மாணவர்களின் விபரங்கள் வெப்சைட்டில் பதிவு செய்யப்படுகிறது. ஒரு மாணவருக்கு இப்பணிக்காக 15 ரூபாய் வரை செலவாகிறது. திருத்தங்கள் இருந்தால் மீண்டும் பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் செலவு அதிகமாகிறது. ஒரே பணியை ஒரே நேரத்தில் முடிக்க முடியாத நிலையில் பல முறைசெய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதால் கல்வி பணி பாதிக்கப்பட்டுள்ளது. நேரமும் வீணாகி வருகிறது. பெரும்பாலான பள்ளிகள் இரு ஆசிரியர் பள்ளிகளாக உள்ளன.புள்ளி விபர பணிக்காக அடிக்கடி கூட்டங்கள் நடத்தப்படுவதால் மாணவர்களின் கல்வித் தரமும் பாதிக்கப்படுகிறது. வேலைப் பளுவால் ஆசிரியர்களிடையே கருத்து வேறுபாடும், ஒற்றுமையின்மையும் அதிகரித்து வருகிறது. வருவாய் துறை மற்றும் தேர்தல் ஆணையத்தில் காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் மூலம் பணிகள் மேற்கொள்வது போல் இப்பணிகளையும் காண்ட்ராக்ட் பணியாளர் மூலம் மேற்கொண்டு ஏழை மாணவர்களின் கல்வி நலனை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி