காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதரவாக புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் வரும்
செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவை முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக அதன் நிர்வாகிகள் மு.சீத்தாராமன், பிரேமதாசன் கூறியது:சம்மேளனத்தில் இணைந்துள்ள சங்கங்களில் ஒன்றான தனியார் பள்ளி ஊழியர் சம்மேளனம் ஊழியர்கள் அரசு உதவிப் பெறும் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கடந்த 6 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.இவர்களில் 8 ஆசிரியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசு இதுவரை அவர்களை அழைத்துப் பேசவில்லை. அவர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர் சங்கங்கள் சம்மேளனமும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.சனிக்கிழமை முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். அவர்களை இதுவரைஅழைத்துப் பேசவில்லை.
இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பிரச்னை தீர்க்கநடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவை முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும். அனைத்து இணைப்பு சங்கங்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.மறியல் பேரணி கம்பன் கலையரங்கில் இருந்து செவ்வாய்க்கிழமை மாலை 4.30க்கு புறப்பட்டு சட்டப்பேரவையை அடையும். புதுவை அரசு உடனே தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் எனத்தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி