அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க ஓய்வூதியர்கள் கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2013

அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க ஓய்வூதியர்கள் கோரிக்கை.


அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும் என ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு ஓய்வூதிய சங்க மாநில செயற்குழுக் கூட்டம் கடலூரில் அண்மையில்
நடந்தது. மாநிலத் தலைவர் காதர் மீரான் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் கலியபெருமாள் வரவேற்றார்.

பொதுச்செயலர் மருதை சங்க செயல்பாடு குறித்த அறிக்கையையும், பொருளாளர் காளிங்கராயன் வரவு, செலவு அறிக்கையையும், மாநில பொதுச்செயலர் துரைசாமி திண்டுக்கல் மாநாட்டு வரவு செலவுகளை சமர்பித்தனர்.கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சண்முகம், செயலர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், ஓய்வூதியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.50,000-மாக உயர்த்தியதற்கும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது.சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்.

தற்போது வழங்கப்பட்டு வரும் 90 சத அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும். முழு ஓய்வூதியம் பெற்றிட தகுதியாக உள்ள 30 ஆண்டு பணிக்காலத்தை 20 ஆண்டுகளாக குறைக்கவேண்டும். மருத்துவப் படியாக மாதம் ரூ.300, பொங்கல் பரிசுத் தொகையை ரூ.1,000, பண்டிகை முன்பணத்தை ரூ.5,000 வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,500 என நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி