பள்ளிகளில் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2013

பள்ளிகளில் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வு.


தமிழகத்திலுள்ள சில பள்ளிகள், திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வை தங்கள் மாணவர்களிடையே ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.பாலியல் விழிப்புணர்வு
தொடர்பான கல்வியை பள்ளிக் கல்வித் திட்டத்தில் கொண்டுவருவது தொடர்பான விவாதம் இன்னும் முடிவு பெறாமலேயே இருக்கிறது என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில், மாநிலத்தின் சில பள்ளிகள் பாராட்டத்தக்க வகையில் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.திருநங்கைகள் தொடர்பான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டிருக்கும் சில களப் பணியாளர்கள் மற்றும் ஆலோசகர்களை பள்ளிகளுக்கு வரவழைத்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அவர்களைப் பற்றிய அறிவை கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன்மூலமாக பள்ளிகளில் படிக்கும் மூன்றாம் பாலின மாணவர்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதுடன், அவர்களை கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக்கி, ஒதுக்கி வைக்கும் மனப்பான்மை அகலுவதுடன், அந்த பாலின மாணவர்கள் நல்ல கல்வியைப் பெறவும் ஏதுவாகும். இதன்மூலம் அவர்கள் சமூக சுரண்டலுக்கு ஆளாவதிலிருந்தும், பாலியல் தொழிலில் இருந்தும் காப்பாற்றப்படுவர்.மாணவர்களுக்கான விழிப்புணர்வில், சமூகத்தில் திருநங்கைகள் அனுபவிக்கும் புறக்கணிப்புகள் மற்றும் சுரண்டல்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி