மாவட்டக்கல்வி அலுவலர் பதவியை இழிவுபடுத்திய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்
சங்க மாவட்டப்பொதுக்குழுகூட்டம் தலைவர் பால்தாஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டக்கல்வி அலுவலர்கள் மாரி மீனாள்(மதுரை), தனபால்(மேலூர்), தருமர்(உசிலம்பட்டி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் சட்டச்செயலாளர் சின்னப்பாண்டி, பிரச்சார செயலாளர் செந்தில்குமார் தீர்மானங்களை வாசிக்க, ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள் வருமாறு:
மாவட்டக்கல்வி அலுவலர் பதவியை இழிவுபடுத்திய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பள்ளிகளில் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தனிஇருக்கைகள் வழங்கப்படும் என்றும், மாவட்டக் கல்வி அலுவலர் நடத்தும் கூட்டங்களுக்கு மூத்த உதவி ஆசிரியரை அனுப்புவோம் என்றும் தீர்மானம் நிறைவேறறிவிட்டு, மாவட்டக்கல்வி அலுவலர் பதவிக்கு 50:25 என இருந்ததை, 40:35 என உயர்ததி மீண்டும் அதை மாற்றக்கோரியுள்ளது முரண்பாடாக உள்ளது.மாவட்டக்கல்வி அலுவலர் பதவியை இழிவுபடுத்திய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்திற்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கழகம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.மாணவர் நலத்திட்டங்களுக்கு தனி இயக்குநர் நியமிக்க வேண்டும் என்றும், தேர்வுத்துறையில் ஏற்பட்டுள்ள சிறந்த மாற்றங்களுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.உசிலம்பட்டி கல்வி மாவட்டச்செயலாளர் முத்தையா, மதுரை கல்வி மாவட்டச் செயலாளர் தங்கநராயணன், மேலூர் கல்வி மாவட்டச்செயலாளர் பாண்டியராஜன், மகளிர் அணி அமைப்பாளர் ரேணுகா மற்றும் தலைமை ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக, மாவட்டச்செயலாளர் பாஸ்கரன் வரவேற்றுப் பேசினார். மாவட்டப் பொருளாளர் மீனாச்சி நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி