EMIS & SMART CARD திட்டத்தின் நோக்கங்கள் மற்றும்பயன்கள்: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2013

EMIS & SMART CARD திட்டத்தின் நோக்கங்கள் மற்றும்பயன்கள்:


1.மாணவர்களின் விவரத்தை கல்வித்துறை அதிகாரிகள் எங்கிருந்தாலும் உடனடியாக அறியலாம்.
2. மாணவன் பள்ளியில்
பயிலும் விவரம் மற்றும் இடைநிற்றல் விவரம் 100% தெளிவாக அறியலாம்.
3. ஒரு மாணவனுக்கு இரண்டு பள்ளிகளில் பெயர் இருக்க முடியாது. அப்படி இருப்பின் உடனே கண்டு பிடித்து விடலாம். ஆகவே தலைமை ஆசிரியர்கள் 100% சரியான விவரங்களை மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டும்.
4. மாணவன் மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் தமிழ்நாட்டின் எந்த பள்ளியிலும் சேர்ந்து பயிலலாம்.
5. அரசின் நலத்திட்டங்கள் மாணவர்களுக்கு சேருகிறதா என்பதை 100% உறுதி செய்ய முடியும்.
6. மாணவர்களின் கல்வி முன்னேற்ற நிலை, உடல் நிலை, தனித்திறன் முதலியவற்றை எளிதாக கண்டறியலாம்.
7. ஆசிரியர்கள் அடிக்கடி புள்ளிவிவரங்கள் அளிக்க வேண்டியதில்லை. ஆனால் தங்கள் பள்ளியில் ஏற்படும் மாணவர் சேர்க்கை மற்றும் நீக்கல் விவரங்களை உடனடியாக தங்கள் பள்ளி EMIS இல் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் மாநில அதிகாரிகள் மாணவர்களுக்கான விலையில்லா திட்டங்களுக்கு தேவையான தகவல்களை பெற முடியும். தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி EMIS Passwordஐ இரகசியமாகவைத்திருப்பது நல்லது.
8. EMIS உள்ளீடு முடிந்தவுடன் மாணவர்களுக்கு SMART CARD வழங்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம் மாணவர்களின் வருகை, பதிவு செய்யப்படலாம். குஜராத்தில் SMARTCARD மூலம் தான் மாணவர்களின் வருகை கண்காணிக்க படுவதாக சொல்லப்படுகிறது.
9. SMARTCARD மாணவர்களின் அடையாள அட்டையாக செயல்படும் இதில் மாணவரின் அடையாள எண்பதிவு செய்யப் பட்டிருக்கும். இந்த எண்ணை கணினியில் உள்ளீடு செய்வதன் மூலம் மாணவரின் கல்வி முன்னேற்ற நிலை உட்பட அனைத்து விவரங்களையும் பெறமுடியும்.
10. EMIS இல், மாணவர் தொலைபேசி எண் பதிவு செய்யப் பட்டுள்ளதால் எந்த கல்வி அதிகாரியும் மாணவருடன் அல்லது மாணவரின் பெற்றோருடன் தொடர்பு கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி