மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி., பள்ளிகள் மே.1ல் மாணவர் சேர்க்கை : தமிழக அரசு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2013

மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி., பள்ளிகள் மே.1ல் மாணவர் சேர்க்கை : தமிழக அரசு உத்தரவு.


வரும் கல்வி ஆண்டிற்கு மே மாதம் 1ம் தேதி முதல் தான் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை மீறும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்
65 ஆயிரம் பள்ளிகள் இயங்கிவருகின்றன. அரசு பள்ளிகளில் மே மாதம் முதல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் டிசம்பருக்குள் மாணவர் சேர்க்கை முடிவதாக புகார் எழுந்தது. தனியார் பள்ளிகள் லாபநோக்கோடு மாணவர் சேர்க்கை நடத்துவதை தடுக்கவும் கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி