பிளஸ் 2; 10ம் வகுப்பிற்கு விடை தாளில் விசேஷ ஏற்பாடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 7, 2013

பிளஸ் 2; 10ம் வகுப்பிற்கு விடை தாளில் விசேஷ ஏற்பாடு.




வரும் பொது தேர்வில், பிளஸ்2 மாணவருக்கு, 38 பக்கங்கள் கொண்டவிடைத்தாள் கட்டும், 10ம் வகுப்பு மாணவருக்கு, 30 பக்கங்கள் கொண்ட விடைத்தாள்
கட்டும் வழங்கப்படும். இதன்மூலம், விடைத்தாள், காணாமல் போவது மற்றும் வேறு விடைத்தாளில் கலப்பது போன்ற பிரச்னைகளுக்கு, தீர்வு காண முடியும்"என தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், நம்பிக்கை தெரிவித்தார்.அவர், கூறியதாவது:

மாணவர்கள், கூடுதல் விடைத்தாள்களை பெற்று, கடைசியில், அதை நூலால் கட்டுவதில் தடுமாறுகின்றனர்; பல மாணவர், சரியாக கட்டுவதில்லை. இல்லையெனில், பக்கங்களை மாற்றி மாற்றி கட்டிவிடுவர். சரியாக கட்டப்படாத விடைத்தாளில் இருந்து, சில பக்கங்கள், தேர்வு மையத்திலேயே, கழன்று விழுந்து,&'மிஸ்&' ஆவதற்கு, வாய்ப்பு உள்ளது.இதுபோல், தனியாக பிரியும் விடை தாள்களை, அதற்குரிய மெயின் விடை தாளில் இணைப்பதில், சிக்கல் ஏற்படுகிறது.

ஒரு மாணவரின் கூடுதல் விடைதாளை, வேறொரு மாணவரின் விடைத்தாளுடன் தெரியாமல் சேர்த்து விடுகின்றனர். இதனால், தேர்வு முடிவிற்குப்பின், மதிப்பெண் குறைந்துவிட்டது என்றும், விடை தாள் நகலை வாங்கி பார்த்தபின், குறிப்பிட்ட பக்கம், தன்னுடையது அல்ல என்றும், மாணவர் புகார் கூறுகின்றனர்.இதுபோன்ற பிரச்னைகள் அனைத்தையும், அதிகமான பக்கங்களை உள்ளடக்கிய விடைதாளை வழங்குவதன் மூலம் தீர்க்க முடியும் என, நம்புகிறோம். தனி தேர்வுகளில், இதுபோன்றவிடை தாளை வழங்கி, சோதித்து பார்த்ததில், எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.அதனால் வரும் பொது தேர்விலும், இதுபோன்ற விடை தாள் வழங்கப்படும். பிளஸ் 2 மாணவருக்கு, 38 பக்கங்கள் கொண்ட, விடை தாள் கட்டு வழங்கப்படும்.

இந்த விடை தாள் கட்டில் இருந்து எந்த ஒரு பக்கமும், தனியாக பிரிய வாய்ப்பு இல்லை.அதேபோல், 10ம் வகுப்பு மாணவருக்கு, 30 பக்கங்களை கொண்ட, விடை தாள் கட்டு வழங்கப்படும். மிக நன்றாக படிக்கும் மாணவர்களாக இருந்தால், இந்த விடை தாளுடன் கூடுதலாக, ஒரு விடை தாளை பெற்றால் போதும். சராசரி மாணவருக்கு, இந்த விடைத்தாளே போதும். இந்த முறையினால், மாணவரின் விடை தாள், மிகவும் பாதுகாப்பான முறையில், விடை தாள் திருத்தும் மையங்களுக்கு சென்று சேரும். இவ்வாறு, தேவராஜன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி