2014ம் ஆண்டில் 8.5 லட்சம் புதிய பணியிடங்கள்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2013

2014ம் ஆண்டில் 8.5 லட்சம் புதிய பணியிடங்கள்?


2014ம் ஆண்டில், பல்வேறு துறைகளில் 8.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணி வாய்ப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட விஷயங்களைத் தாண்டி, 2013ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 7.9 லட்சம் பணியிடங்களைவிட, 2014ம் ஆண்டில்
உருவாக்கப்படும் பணியிடங்கள் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.12க்கும் மேற்பட்ட தொழில் பிரிவுகளைச் சேர்ந்த, 5,600க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, மேற்கண்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த பணி வாய்ப்புகள், FMCG தவிர, மருத்துவத் துறை, ஐ.டி., சில்லறை வணிகம் மற்றும் விருந்தோம்பல் துறை உள்ளிட்டவைகளில் அதிக பணி வாய்ப்புகள் உருவாகும். கடந்த காலண்டர் ஆண்டு, பணி தேடுநர்களுக்கும், பணி வழங்குநர்களுக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கவில்லை. நிலையற்ற பொருளாதார மற்றும் அரசியல் சூழல்களே அதற்கு காரணம்.ஆனால் வரும் 2014ம் ஆண்டு, அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படக்கூடிய சாதகமான அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலே கூறியுள்ளபடி, 8.5 லட்சம் பணியிடங்கள்உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி