பிளஸ் 2 தேர்வெழுத இனி இல்லை தனித்தேர்வு மையம்டிசம - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 5, 2013

பிளஸ் 2 தேர்வெழுத இனி இல்லை தனித்தேர்வு மையம்டிசம


பிளஸ் 2 தேர்வெழுதும் தனித்தேர்வர்களுக்கு, இனி தனி தேர்வுமையம் கிடையாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.அரசு , தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அந்தந்தபள்ளிகளில்
அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த காலங்களில் தேர்வு மையத்தில் ஒரு ஹாலில் அதிகபட்சம் 30 பேர் அனுமதிக்கப்பட்டனர். இந்த நடைமுறையில் வரும் பொதுத் தேர்வில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.ஒரு ஹாலில் 20 பேர் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுகின்றனர். இது தவிர, பள்ளிகளில் பயிலாதோர் தனித்தேர்வர்களாக அனுமதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு தனி மையம் அமைத்து தேர்வு நடத்தப்பட்டது.

வரும் பொதுத்தேர்வில் இவர்களுக்கென தனி தேர்வு மையம் கிடையாது.பள்ளி மாணவர்களின் தேர்வு மையத்தில் இடையே, இடையே தனித்தேர்வர்களுக்கு இடம் ஒதுக்கி தேர்வெழுத வேண்டும், என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "வீட்டில் படித்து பொதுத்தேர்வு எழுதுவோருக்கென தனிப்பாடம் கிடையாது. தனித்தேர்வர்கள் என்ற மனநிலையை போக்க, பள்ளி மாணவர்களுடன் இணைந்து ஒரே ஹாலில் தேர்வெழுதும் புதிய நடைமுறை, வரும் தேர்வில் பின்பற்றப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி