மாவட்டத்துக்கு 5 பள்ளிகளில் அறிமுகம் கம்ப்யூட்டர் மூலம் ஒரே நேரத்தில்பல பள்ளிகளில் பாடம் எடுக்கும் திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2013

மாவட்டத்துக்கு 5 பள்ளிகளில் அறிமுகம் கம்ப்யூட்டர் மூலம் ஒரே நேரத்தில்பல பள்ளிகளில் பாடம் எடுக்கும் திட்டம்.


நாகர்கோவில்: தமிழகத்தில் கம்ப்யூட்டர் மூலம் ஒரே நேரத்தில் பல பள்ளிகளில் பாடம் எடுக்கும் திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்பட்ட 5 பள்ளிகளில் செயல்படுத்தப்பட
இருக்கிறது. தமிழக பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை ஒருங்கிணைத்து ‘கனெக்டிங்கிளாஸ் ரூம்‘என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த முறையில் ஒரே நேரத்தில் எல்லா வகுப்பறைகளிலும் கணினி உதவியுடன் பாடம் போதிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்பட்ட5பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக4மண்டலங்களில் பயிற்சி பட்டறை நடத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு ஒரு பள்ளிக்கு42ஆயிரத்து187ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்திற்கு தேவையான உபகரணங்களும் கொள்முதல் செய்ய ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் மாவட்டம் வாரியாக தேர்வு செய்யப்பட்ட ஐந்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்,நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில புலமையுடன் கூடிய கணினியில் திறம்பட பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒருவருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான பயிற்சிபட்டறை சென்னை,திருச்சி,கோவை,மதுரை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.சென்னை மண்டலத்தில் சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,வேலூர்,திருவண்ணாமலை,கடலூர்,விழுப்புரம்,தர்மபுரி மாவட்டங்களுக்கு டிசம்பர்27ம் தேதி சென்னை சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தகவலை பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி