உடற்கல்வி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப முதல்வருக்கு கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 1, 2013

உடற்கல்வி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப முதல்வருக்கு கோரிக்கை.


அரசு சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ள 1300க்கும் மேலான உடற்கல்விஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் கழகம் முதல்வருக்கு கோரிக்கை
விடுத்துள்ளது.தமிழ்நாடு பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் கழகம் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் ரா.ஜெயதேவன் தலைமை வகித்தார். செயலாளர் ரா.ராஜசுந்தரம் முன்னிலை வகித்தார். பொருளாளர் தே.கோவலன் முன்னிலை வகித்தார். பொருளாளர் கே.கோவலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர்களின் ஊதிய முரன்பாட்டை சரி செய்ய வேண்டும், தமிழகத்தில் உடற்கல்வி பாடத்தை தொடர் மற்றும் முழு மதிப்பீடு (CCE) முறையில் கட்டாயமாக்கியதற்கும், பள்ளிக் கல்வித்துறையில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடத்த அதிக நிதி ஒதுக்கியதற்கும் முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, சதுரங்க விளையாட்டை அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாக்கியத்கும், சென்னை விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஓடுதளம் அமைத்ததற்கும், உலக சதுரங்க போட்டியை தமிழகத்தில் நடத்தி பெருமை சேர்த்ததற்கும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி