அரசு ஊழியர் மகள் ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2013

அரசு ஊழியர் மகள் ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்.


அரசு ஊழியரின் மகளுக்கான குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக, தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது. தமிழக அரசு ஊழியர்களின், திருமணமாகாத, விவாகரத்தான,
விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும், குடும்ப ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக, 2011ல் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், யார் யார் தகுதியுடையவர் என்பதை தெளிவுபடுத்தும்படி, தமிழக அரசிற்கு, சென்னை மாநகராட்சி கமிஷனர் கடிதம் எழுதினார்.

இந்த கடிதத்தின்அடிப்படையில், அரசு ஊழியர்களின் திருமணமாகாத மகள், அரசாணை வெளியிடப்பட்டநாளிற்கு முன், 25 வயது முடிவடைந்து, குடும்ப ஓய்வூதியம் நிறுத்தப்பட்ட நபர்களுக்கு, அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் வழங்கலாம் என, கூறப்பட்டுள்ளது. மேலும், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுக்கு, நிபந்தனைக்கு உட்பட்டு, வழங்க வேண்டும் என்பது உட்பட, ஏழு இனங்களுக்கு அரசு விளக்கம் அளித்து, அதற்கான அரசாணை நேற்று, நிதித்துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி